
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இந்த மாத ஆரம்பத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஏராளமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதில் சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர். அதன்பின்னர், இந்த வார இறுதியில் பாதுகாப்பு படையினருக்கும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட போகொஹாரம் தீவிரவாதிகளைத் தேடி பாதுகாப்பு படை நைஜீரிய கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, இஸ்லாமியர்கள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். இவர்களில் ஐந்து பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்றும், 20 பேர் பொதுமக்கள் என்றும் பாதுகாப்பு படை தலைவர் அலிக்கோ மியுசா தெரிவித்தார்.
இறந்தவர்களில் மீனவர்களும், வியாபாரிகளும் அடங்குவர். மாணவர்கள் கொலையுண்டதற்குப் பின்னர் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பெரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார். நைஜீரியாவின் ராணுவப்பிரிவைச் சேர்ந்த லெப்டினென்ட் ஹருணா முகமது சனி, அரசு தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறினார்
thamilan thanks
No comments:
Post a Comment