அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 18 July 2013

பீகார் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் போலீசார் 3 பேர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்!

பீகார் மாநிலத்தில் இன்று முற்பகல் தொடங்கி பல மணிநேரம் நடைபெற்ற மாவோயிஸ்ட் உடனான துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 போலீசார் மற்றும் இரண்டு தனியார் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் எனும் இடத்தில் பாலம் கட்டுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பாலத்தை சுற்றி வளைத்த மாவோயிஸ்டகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 50 போலீசார், பல மணிநேரம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இரு தரப்பினருக்கும் நடைபெற்ற  இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 3 போலீசார், மற்றும் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த தனியார் பாதுகாப்பு படையினர் 2 பேர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தெரிய வருகிறது. மாவோயிஸ்ட் அதிகமுள்ள இடங்களில் மாநில பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து எச்சரிக்கயுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

4tamilmedia. thanks

No comments:

Post a Comment