அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 20 July 2013

ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை: சிவதாணுப்பிள்ளை தகவல்

ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை சோதனை: சிவதாணுப்பிள்ளை தகவல்
ராமநாதபுரம், ஜூலை 20–
ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணைக்கான சோதனை நடந்து வருவதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன தலைமை அதிகாரி சிவதாணுப்பிள்ளை கூறினார்.

ராமேசுவரம் மசூதி தெருவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய சோலார் கருவியை தொடங்கி வைத்து சிவதாணுப்பிள்ளை கூறியதாவது:–
நிலத்தில் இருந்தும், கப்பலில் இருந்தும் பாயும் வகையில் பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டு, அவை ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது விமானத்தில் இருந்து ஏவுகணையை இயக்குவதற்கான ஆராய்ச்சிகளை ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளோம். இதற்கான ஆராய்ச்சி பணிகள் 2015–ல் நிறைவுபெறும் நிலையில் உள்ளன.
இப்பணி முழுமை அடைந்தால் நிலம், நீர், வானம் ஆகிய மூன்றிலும் ஏவுகணையை இயக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
விமானத்தில் இருந்து ஏவுகணையை இயக்க வேண்டுமெனில், சுகோஸ் ரக விமானத்தில்தான் அதை பொருத்த முடியும். எனவே சுகோய் ரக விமானத்தில் பொருத்தி அதை இயக்குவதற்கான ஆராய்ச்சிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த ஏவுகணையானது ஒலியை விட 3 மடங்கு வேகமாக செல்லும் வகையில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பல்வேறு நாடுகள் இந்த ஏவுகணையை தங்களுக்கு தருமாறு கேட்டு வருகின்றனர்.
அதற்கான விற்பனையை இந்தியா, ரஷ்யா ஆகிய இருநாட்டு அரசுகளும் இணைந்துதான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

news maalaimalar thanks

No comments:

Post a Comment