பழனி, ஜூலை. 24-
கர்நாடகா மாநிலம் பெங்களூர் சேம்பாத்மா கோவில் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன்(30). இவரது மனைவி சுதா(19). இவர்களுக்கு 3 வயதில் ஷோபா என்ற குழந்தை உள்ளது. கணவனும், மனைவியும் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினத்தை சேர்ந்த மாது என்பவரின் மகன் திலீப்குமார் என்பவர் கஜேந்திரனிடம் வேலைக்கு சென்றார். அப்போது திலீப்குமாருக்கும், சுதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுதா தனது கள்ளக்காதலனுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வந்து விட்டார். அப்போது அவர் தனது 3 வயது குழந்தை ஷோபாவையும் அழைத்து வந்துவிட்டார். இவர்கள் பழனி பாண்டியன் நகரில் வசித்து வந்தனர். இதற்கிடையே மனைவி மாயமானதை தொடர்ந்து கஜேந்திரன் பெங்களூர் முழுவதும் தேடி வந்தார்.
பழனிக்கு வந்த சுதா மீண்டும் கர்ப்பமானார். தற்போது அவர் 6 மாத கர்ப்பிணியாகி உள்ளார். திலீப்குமார் பழனி பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக சுதாவின் மகள் ஷோபா சரியாக சாப்பிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த திலீப்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 வயது குழந்தை என்று கூட பாராமல் சிறுமிக்கு சிகரெட் துண்டால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு கை, கால், முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது மனைவி சுதா பழனியில் கள்ளக்காதலனுடன் இருப்பது கஜேந்திரனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் பழனிக்கு வந்து மனைவியிடம் குழந்தையை மட்டும் என்னுடன் அனுப்பிவிடு என்று கூறினார். அப்போது குழந்தைக்கு சூடுவைக்கப்பட்டு இருப்பதை பார்த்த கஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கஜேந்திரன் தனது குழந்தையை தூக்கி கொண்டு பெங்களூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது டாக்டர்கள் நடத்திய விசாரணையில், 2-வது கணவர் சிறுமிக்கு சூடுவைத்தது தெரியவந்தது.
பின்னர் பெங்களூர் டாக்டர்கள் இதுகுறித்து விசாரணை நடத்த பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பாண்டியன் நகரில் வசித்த வந்த சுதாவின் 2-வது கணவர் திலீப்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

maalaimalar thanks
No comments:
Post a Comment