Thursday, July 18th, 2013
சிங்கப்பூரில் பறவைக் காய்ச்சல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை விட்டுவிட முடியாது என்பதே வேளாண், உணவு, கால்நடை ஆணையத்தின் செய்தியாக இருக்கிறது.
நோயுற்ற கோழிகளைக் கொல்லும் செய்முறைப் பயிற்சி, ஒரு இறைச்சிக்காக பறவைகளைக் கொல்லும் இடத்தில் முதன் முறையாக நேற்று நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் 500 கோழிகள் கொல்லப்பட்டன. மின்னாற்றலைச் செலுத்தி கோழிகளைக் கொல்வதற்கு சில வினாடிகளே ஆகின்றன. இந்த முறை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள இறைச்சிக்காக கோழிகளைக் கொல்லும் இடங்களில் ‘சூன்லி’ உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையும் ஒன்று.
இங்கு நாளொன்றுக்கு சுமார் 165,000 கோழி மற்றும் வாத்துகள் பதப்படுத்தப்படுகின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்களை அவசர காலத்திற்கு தயார்படுத்துவதற்காக அடிக்கடி பயிற்சி அளிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றிய பயிற்சியில் இந்நிறுவனத்தின் சில ஊழியர்கள் நேற்று காலை ஈடுபடுத்தப்பட்டனர். இந்தப் பயிற்சியில் நான்கு முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்ட ஊழியர்களின் உடல் வெப்பநிலை அளக்கப்பட்டது. பறவைக்காய்ச்சல் போன்ற அவசர காலத்தில் ஊழியர்கள் அணிய வேண்டிய பாதுகாப்பு மிக்க முகக் கவசங்கள், பாதுகாப்புக் கண்ணாடிகள், முடி வலைகள் இரட்டை மடிப்புக் கையுறைகள் ஆகியவற்றை அணிந்தனர்.
கொல்லப்பட்ட பறவைகள் பிரத்தியேகப் பைகளில் அடைக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டன. கடைசியாக, இந்த நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் சுத்திகரிக்கப் பட்டன. இது 2002ம் ஆண்டு முதல் வேளாண், உணவு, கால்நடை ஆணையம் நடத்தும் 7வது பயிற்சி நடவடிக்கையாகும்.
tamilmurasu thanks
No comments:
Post a Comment