அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 July 2013

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன''-- ஜவாஹிருல்லாஹ்


E-mailPrintPDF
பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவதூறுகள் பரப்பப்படுவதாக ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை கும்பகோணத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:சேலத்தில் பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

படுகொலை தொடர்பாக மிகப்பெரிய அவதூறுகளை இந்து அமைப்பினர் சிலர் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களில் சிலர் இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளிலும், ஆளுங்கட்சியிலும் கூட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது ஒருதலைபட்சமாக பாஜகவினர் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் தென் சென்னையில் பாஜக பொறுப்பாளர் விட்டல் கொலை, வேலுரில் டாக்டர் அரவிந்த்ரெட்டி கொலை, நாகையில் புகழேந்தி கொலை, பரமக்குடி முருகன் வழக்கு ஆகியவற்றில் முதலில் முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தி பிரசாரத்தை பாஜகவினர் கூறினர். ஆனால், போலீஸார் விசாரணையில் சொந்தக் காரணங்களுக்காகவும், கொடுக்கல் வாங்கல், ரியல் எஸ்டேட், பெண்கள் பிரச்னை போன்றவற்றுக்காகவும் இந்தக் கொலைகள் நடந்தது விசாரணையில் தெரியவநதது.சமீபத்தில் வெள்ளையப்பன் கொலையும், ஆடிட்டர் ரமேஷ் கொலையும் காவல் துறை விசாரணையில் உள்ளது. ஆனால், விசாரணை முடிவதற்கு முன்பே யூகத்தின் அடிப்படையில் சிலர் ஏற்படுத்தும் தவறான பிரசாரத்தின் காரணமாக, காவல்துறையினர் பொறுப்பற்ற முறையில் மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.ஆனால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் தமிழக அரசு ஒப்படைத்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்

No comments:

Post a Comment