கீழக்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகக் குழுக் கூட்டம் நகர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமுமுக நகர் தலைவர் முஹம்மது சிராஜூதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோஸ்முஹம்மது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கீழக்கரை நகராட்சியில் நடைபெறும் சீர்கேடுகளைக் கண்டித்தும், முறையான குடிநீர் கோரியும் வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம் பஜாரில் பகல் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜூலை 15-க்குள் அனைத்து மக்கள் நலப் பணிகளும் நிறைவேற்றப்படும் என்று கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மூத்த தலைவர் ஹசன், நகர் செயலர் பவுசுல்அமீன், ஒன்றியச் செயலர் சாதிக், மமக செயலர் இக்பால் கலந்து கொண்டனர்.
news dinamani. thanks
No comments:
Post a Comment