அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 17 July 2013

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு:அமித் ஷா சிக்குகிறார்!புதிய ஆதாரங்களுடன் சி.பி.ஐ!


M_Id_386891_Amit_Shah
புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியின் நம்பிக்கைக்குரியவருமான அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலைச் செய்த வழக்கு தொடர்பாகவும், வழக்கை திசை திருப்பவும் அமித் ஷா, குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 2 பென் ட்ரைவ்களை சி.பி.ஐ குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், சி.பி.ஐக்கு முக்கிய தகவல்களை அளித்தவருமான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால் என்பவர்தாம் இந்த உரையாடல்களை சி.பி.ஐக்கு அளித்துள்ளார். அமித் ஷாவுடன் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் தொடர்பாக 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்திய தொலைபேசி உரையாடல்களை சிங்கால் பதிவுச் செய்துள்ளார். இந்த உரையாடலை சிங்கால், சி.பி.ஐயிடம் ஒப்படைத்துள்ளார்.
முன்னர் 2011-ஆம் ஆண்டு குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் பட்டேல், போலீஸ் அதிகாரிகளை காப்பாற்ற நடத்திய சதித்திட்டத்தின் விரிவான தகவல்களையும் சிங்கால், சி.பி.ஐயிடம் ஒப்படைத்திருந்தார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான டி.ஐ.ஜி வன்ஸாரா, போலி என்கவுண்டர் நடப்பதற்கு முன்பும், பின்பும் பல தடவை அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதற்கான ஆதாரம் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.
இந்த மாத துவக்கத்தில் சி.பி.ஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் போலி என்கவுண்டரில் நேரடியாக தொடர்புடையவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், சதித்திட்டம் குறித்து கூடுதல் விசாரணை நடத்தி ஐ.பி ஸ்பெஷல் இயக்குநர் ராஜேந்தர்குமார் உள்ளிட்ட 4 ஐ.பி. அதிகாரிகள் மீது துணை குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் என்று சி.பி.ஐ அறிவித்திருந்தது.சதித்திட்டத்தில் அமித் ஷா மற்றும் மோடியின் பங்கினை நிரூபிக்கும் ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் தற்போது சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாகத்தான் சி.பி.ஐ, அமித் ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.
2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியான டி.ஜி.வன்ஸாராவுடன் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டிருந்த ஒரு மொபைல் ஃபோன் நம்பரை குறித்தும் சி.பி.ஐ விசாரணையை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இந்த நம்பரை தற்போது உபயோகிக்கும் நபருக்கு இவ்வழக்கில் சம்பந்தமில்லை என்று சி.பி.ஐ கருதுகிறது. டி.ஜி.வன்ஸாரா இந்த நம்பர் மூலம் தொடர்புகொண்ட நபர் அமித் ஷா உள்ளிட்ட தாங்கள் சந்தேகிக்கும் நபர்களா? என்பதையும் சி.பி.ஐ பரிசோதித்துவருகிறது.
news .thoothuonline thanks

No comments:

Post a Comment