அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 28 July 2013

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு 'செக்ஸ்' தொல்லை கொடுத்தால் பணி நீக்கம்: புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
புதுடெல்லி, ஜூலை.29-

வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.

அதில், வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகார் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல் செக்ஸ் தொல்லை என்று கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு குற்றவாளிக்கு வழங்கப்படும் பணி நீக்கம் உள்ளிட்ட மேற்கண்ட அதே தண்டனைகளை வழங்கவும் வரைவு மசோதாவில் பரிந்துறை செய்யப்பட்டு உள்ளது. 

அதில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு-

இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் அல்லது கிரிமினல் சட்ட விதிகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சமூக சேவகர் ஒருவர் இடம் பெற வேண்டும்.

மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அல்லது மாவட்ட அளவிலான பெண்கள் துயர் துடைக்கும் அமைப்பு ஒன்று, விசாரணை கமிட்டிக்கு தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

புகார் கொடுத்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை எதுவும் நடத்தக்கூடாது. விசாரணையின்போது எந்த ஒரு கட்டத்திலும் இரு தரப்பிலும் சட்ட பிரதிநிதிகள் யாரும் ஆஜராக அனுமதி இல்லை.

மேற்கண்ட விதிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன. வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

news maalaimalar thanks

No comments:

Post a Comment