அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 8 February 2014

அபத்தங்கள் நிறைந்த குஜராத் பாடப்புத்தகம்!


Text Book
அஹ்மதாபாத்: “தேசத் தந்தை மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள் அக்டோபர் 30, 1948” – இது தவறுகள் நிறைந்த குஜராத் ஆங்கில மீடியம் எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஓர் உதாரணம்.

மகாத்மாக காந்தி ஜனவரி 30-ஆம் நாள் கொல்லப்பட்ட சம்பவம் சாதாரண மக்கள் கூட அறிந்த விஷயம். இத்தகைய சாமான்ய அறிவு கூட இல்லாதவர்கள்தாம் குஜராத்தில் பாடப்புத்தகத்தை தயாரித்துள்ளார்கள்.
குஜராத் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெயினிங் என்ற நிறுவனம்தான் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. எத்தகைய விவரங்களையும் ஒரு மவுஸ் க்ளிக்கில் கிடைக்கும் வசதிகள் நிறைந்த இக்காலத்தில் இத்தகைய தவறுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குஜராத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படிக்கும் இப்பாடப்புத்தகத்தில் தாதாபாய் நவ்ரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் தீவிரவாதிகளாக இருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் இவர்கள் காங்கிரஸ் கட்சியில் மிதவாதிகளாக அறியப்பட்டவர்கள்.
1947-ஆம் ஆண்டு இந்திய பிரிவினைக்குப் பிறகு ’இஸ்லாமிக் இஸ்லாமாபாத்’ என்ற நாடு உருவானதாம். இதன் தலைநகர் ஹிந்துகுஷ் மலைக்குன்றுகளில் உள்ள கைபர்கட் என்ற யாரும் இதுவரை அறியாத புதிய தகவலும் இப்பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்களை காந்திஜிக்காக ஒதுக்கியுள்ளார்கள். அதிலும் தவறுகள் நிரம்பி வழிகின்றன. அஹ்மதாபாத்தில் கொச்ராபில் 1925 ஆம் ஆண்டு மே மாதம் காந்திஜி முதன் முதலில் சத்தியாகிரக ஆசிரமத்தை நிறுவினார் என கூறப்பட்டுள்ளது. ஆனால், 1915-ஆம் ஆண்டிலேயே காந்திஜி ஆசிரமத்தை நிறுவினார் என்பதுதான் உண்மை.
125 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில் 59 உண்மைக்கு புறம்பான தகவல்களும், நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்துப் பிழைகளும் இடம் பெற்றுள்ளன. பிரபலமான சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்களின் பெயரெல்லாம் தப்பும், தவறுமாக இடம் பெற்றுள்ளன. இப்புத்தகத்தை படித்தால் வரலாறே தலைகீழாக மாறியதாக தோன்றும்.
இவ்வேளையில் புத்தகத்தை வாபஸ் பெற இயலாது என்றும் தவறுகளை பரிசோதித்து சரியான விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்றும் பாடப்புத்தகங்களுக்கான குஜராத் மாநில வாரியத்தின் செயல் தலைவர் நிதின் பெதானி பதிலளித்துள்ளார்.


news thoothuonline thanks

No comments:

Post a Comment