அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

ஜெயலலிதா ஜாமீனில் திடீர் திருப்பம்!

ஜெயலலிதா ஜாமீனில் திடீர் திருப்பம்!
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 11:21.01 AM GMT +05:30 ]
ஜெயலலிதா ஜாமீன் மீதான மனு விசாரணை மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னர் அடுத்த வாரம் 6ம் திகதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான்.

எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வழக்கறிஞரை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது. 
எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை.

எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், செவ்வாய்க்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார்.

newindianews thanks

No comments:

Post a Comment