அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 September 2014

ஜெயலலிதாவின் ஜாமீன், மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க நீதிபதி மறுப்பு



பெங்களூர், அக்.1-

பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. இதேபோல், அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஜெயலலிதா தரப்பில் வாதாடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி பெங்களூர் வந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பாக வாதாடும் வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு அரசு அறிவிப்பாணை 
கிடைக்காததால், வழக்கை விசாரிக்க காலஅவகாசம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 6-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா அறிவித்தார். இந்நிலையில், ஜாமீன் மனுவை அவசர கால மனுவாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா இந்த மனுவை நாளை (இன்று) விசாரிப்பார் என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் இன்று காலை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணைக்கு இருதரப்பு வழக்கறிஞர்களும் தயாராக இருந்தனர். காலை 10 மணியளவில் கோர்ட்டுக்கு வந்த நீதிபதி ரத்னகலா, இவ்வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார். இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி மேற்படி வழக்கமான விசாரணை நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் 6 அல்லது 7-ம் தேதி கர்நாடக ஐகோர்ட் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

news maalaimalar thanks

No comments:

Post a Comment