அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 12 October 2014

ஹூட் ஹூட் புயல் விசாகப்பட்டினத்தில் கரையை கடந்தது: கனமழைக்கு 3 பேர் பலி!


Posted Date : 10:15 (12/10/2014)Last updated : 15:17
விசாகப்பட்டினம்: ஹூட் ஹூட் புயல் விசாகப்பட்டினத்தில் புடிமடக்கா என்ற இடத்தில் கரையை கடந்தது. ஆந்திர மாநிலத்தில் கனமழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே புடிமடக்கா என்ற இடத்தில் ஹூட் ஹூட் புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது, விசாகப்பட்டினத்தில் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காரணமாக ஆந்திரா, ஒடிஷாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழைக்கு சுவர் இடிந்து ஒருவரும் மரங்கள் விழுந்து இருவரும் என மொத்தம் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று ஆந்திர தலைமை செயலர் அறிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம்...
ஹூட் ஹூட் புயல் காரணமாக விசாகப்பட்டினம் துறைமுகமும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது மிகவும் கடினமானது. விசாகப்பட்டினத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் பலத்த காற்று இல்லை, ஆனால் கனமழை பெய்யும். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் வடக்கு  கடற்கரை மாட்டங்களில் வேகமான காற்றுடன் பலத்த மழை பெய்யும். மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினத்தில் நாளை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் ரதோர் தெரிவித்துள்ளார்.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் கரையைக் கடக்கும் பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும்போது, 1 முதல் 2 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை எழும்பும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை...
ஹூட் ஹூட் புயலால் பெய்துவரும் கனமழை காரணமாக விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்றும், பலத்த காற்று வீசுவதால் மாலை வரை பொதுமக்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிஷா முதல்வர் தகவல்...
ஒடிஷாவில் முன்னெச்சரிக்கையாக இதுவரை 604 முகாம்களில் 67 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.

மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன...
தற்போது ஆந்திராவில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருவதால் விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் விசாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள், சிக்னல்கள், தொலைபேசி, மின் கம்பங்கள் சாய்ந்துள்ளனர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
பேருந்து, விமான சேவை நிறுத்தம்...
ஹூட் ஹூட் புயலால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு 500 மீட்டருக்கு குறைவான தொலைவையே பார்க்க முடியும் நிலை உள்ளது. இதனால், விசாகப்பட்டினம்-புவனேஸ்வர்ர் இடையே விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் விசாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் சேவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் தேசிய நெடுஞ்சாலை 16-ல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப்படை...
புயலால் பாதிக்கப்பட்டு உள்ள விசாகப்பட்டினத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப்படை, கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. விசாகப்பட்டினத்தில் புயல் கரையை கடந்தநிலையில் நாங்கள் எங்களுடைய குழுவின் எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தியுள்ளோம். முன்னதாக விசாகப்பட்டினத்தில் மட்டும் 6 குழுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்று தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.



news.vikatan thanks

No comments:

Post a Comment