அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 11 October 2014

எனக்கு எபோலா நோய் உள்ளது? திடீரென நடுவானில் கூச்சலிட்ட பயணியால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

[ சனிக்கிழமை, 11 ஒக்ரோபர் 2014,
அமெரிக்க விமானம் ஒன்றில் டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த பயணியொருவர் தனக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டொமினிக்கன் குடியரசில் புன்டா கனா நகரிலுள்ள விமான நிலையத்தை அமெரிக்க விமானம் நெருங்கிய போது அமெரிக்கப் பயணி திடீரென கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து விமான பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, விமானம் புன்டா கனாவில் தரையிறங்கியுள்ளது.
அந்த நபர் விமான பயணத்தின் போது தொடர்ந்து இருமியவாறு இருந்ததாக கூறப்படும் நிலையில், பாதுகாப்பு கவச ஆடை அணிந்து வந்த 4 அதிகாரிகள் அந்தப் பயணியை விமான நிலையத்திலுள்ள மருத்துவ நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்த பயணியை அதிகாரிகள் தூக்கிச் சென்ற போது, தான் எபோலா வைரஸ் பரவி வரும் ஆப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவ நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
எனவே அவர் ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு கூச்சலிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும், அந்தப் பயணி விமானத்திலிருந்து அகற்றப்படும் வரை ஏனைய பயணிகள் சுமார் இரண்டு மணிநேரம் விமானத்தை விட்டு வெளியேற முடியாமல் போனதாக கூறப்படுகிறது.



newsonews thanks

No comments:

Post a Comment