அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 17 December 2014

இது வெறும் டிரைலர் தான், தாக்குதல்கள் தொடரும்: எச்சரிக்கும் தலிபான்கள்


[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014,
பாகிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட கொடூரமான மிருகவெறித் தாக்குதல் வெறும் டிரைலர் தான் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 மாணவர்கள் உட்பட 145 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ஜிஹாத் யார் வாஸிர்(Jihad yar wasir) கூறியதாவது, பெஷாவரில் சுட்டுக் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பாகிஸ்தான் இராணுவத்தினர்.
அவர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தவர்கள். வடக்கு மற்றும் தெற்கு வஜ்ரிஸ்தானில் எங்களது பிள்ளைகள் ஈவிரக்கமற்ற முறையில் குண்டு வீசி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் இராணுவத்தினரே காரணம், அதற்கு பழிவாங்கும் தாக்குதலே இது.
பெஷாவர் பள்ளிக் குழந்தைகள் அப்பாவிகள் எனில் எங்களது குழந்தைகளும் அப்பாவிகள் தானே. அமெரிக்காவுக்கு ஆதரவாக எங்கள் குடும்பங்கள் மீதும் குழந்தைகள் மீதும் குண்டுகளை வீசி அழிக்க வேண்டாம் என்று அந்த பள்ளிக் குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு அறிவுறுத்தட்டும்.
படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் கோட், சூட், டை என மேற்கத்திய கலாசாரத்துடன் இருக்கிறார்கள்.
ஆனால் எங்களது குழந்தைகள் இஸ்லாமிய கலாச்சாரப்படி உடை அணிந்தவர்கள். அதனால்தான் எங்களது குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போது ஊடகங்கள் மற்றும் மேற்குலகத்தின் கண்களுக்கு அது தெரியாமல் போனது.
அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக மேலும் பல தாக்குதல்களை நடத்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இது வெறும் டிரைலர் தான் என்றும், இனி இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் தலிபான் செய்தி தொடர்பாளர் முகமது கொரசானி தெரிவித்துள்ளார்.
news newsonews thanks

No comments:

Post a Comment