அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 15 March 2017

சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு கோரும் பெண் எம்.பி


Sanitary napkin

அஸ்ஸாமை சார்ந்த பெண் எம்.பி. ஒருவர் சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்க கோரி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் மனு அளித்துள்ளார்.

அசாம் சில்சார் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் அளித்துள்ள மனுவில், இந்தியப் பெண்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே சானிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். கிராமப்புற பகுதிகளில் இந்த சதவீதம் இன்னும் குறைவு. மொத்தத்தில் 70% மேலான இந்திய பெண்களுக்கு சானிடரி நாகின் கிடைப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதற்காக வலைதள மனு ஒன்றையும் சுஷ்மிதா தேவ் தொடங்கியுள்ளார்.
X
by ads
சானிடரி நாப்கினுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு ஆண்டின் 12 மாதங்களும், சுமார் 39 ஆண்டுகளுக்கு தொடரும் மாதவிடாய் என்ற இயற்கையான விசயத்திற்கு அத்தியாவசியமாக பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கினுக்கு வரி விதிப்பது நியாயமல்ல. மேலும் சானிடரி நாப்கின் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும் என வாதிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதாதேவ்.

No comments:

Post a Comment