அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 8 November 2019

ஏழ்மையின் பிடியில் சிக்கி பல

ஏழ்மையின் பிடியில் சிக்கி பல இஸ்லாமிய ஆண்கள், பெண்களின் வாழ்க்கை சிதைந்து போயுள்ளது.

காலையில் எனது தொலைபேசிக்கு கல்லூரி பேராசிரியரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இரத்த போக்கின் காரணமாக அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது. இரண்டு நாள் முயற்ச்சி செய்கிறார்கள் இன்னும் கிடைக்கவில்லை. அப்பெண்ணின் தகப்பனார் பதற்றம் அடைகிறார். சற்று முடிந்தால் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அவருக்கு தேவையான இரத்த வகையை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கூறினார்.

நான் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினேன். மருத்துவமனையில் இரத்தம் கொடுக்காவிட்டால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்லுங்கள் என மருத்துவர்கள் பயமுறுத்துவதாக கவலைப்பட்டார். நான் நேரில் மருத்துவரை சந்தித்து விசாரித்தேன். இன்று இரத்தம் கொடுங்கள் நாளை ஏற்றிவிடலாம் என்று கூறினார்.

மீண்டும் அந்த பெண்ணின் தக்கப்பனாரிடம் சென்று மருத்துவரிடம் பேசிவிட்டேன் அச்சப்பட தேவையில்லை. நான் ஒரு மணி நேரத்தில் இரத்தம் ஏற்பாடு செய்து கொடுக்கிறேன் என கூறிவிட்டு அந்த முதியவரிடம் உங்கள் மகளின் கணவர் எங்கு இருக்கிறார் என கேட்டேன். நான் கேட்டதும் அந்த பெரியவருக்கு கண்கள் குலமாகின. அவரை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்த சொல்லி எதற்காக அழுகிறீர்கள் என விசாரித்தேன்.

ஏழ்மையின் காரணமாக என் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மூத்த மகளுக்கு 33 வயதும், இரண்டாவது மகளுக்கு 30 வயதும் ஆகிவிட்டது. ஆனால் திருமணம் முடித்து கொடுக்கும் சக்தி என்னிடம் இல்லை என புலம்ப ஆரம்பித்தார். மகனுக்கும் திருமணம் வயது கடந்து விட்டது. அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறினார்.

நீங்கள் எந்த ஊர் ஐயா, என கேட்டேன். அவர் கூறிய ஊர் இஸ்லாமிய கிராமம். உங்கள் ஊரில் ஜமாத்தோ அல்லது வேறு யாரும் உங்களுக்கு உதவி செய்யவில்லையா என்றேன். ஜமாத் என்னிடம் மகளுக்கு சீக்கிரம் மாப்பிளை பாருப்பா என்று சொல்வதுடன் சரி. ஆனால் எனக்கோ திருமணம் செய்து வைக்கும் சக்தி இல்லை. என் ஏழ்மையை வைத்து ஒன்னு மில்லாதவனிடம் சம்பந்தம் வைத்து என்ன புண்ணியம் என நான் போகும் இடமெல்லாம் மாப்பிள்ளை தர மறுக்கிறார்கள். வேறு யாரும் இந்த முயற்சி எடுக்கவில்லை. யாரும் மனமுவந்து திருமணம் முடிக்கவும் வரவில்லை. நான் என்ன செய்வது என மீண்டும் அழுதார்.

அதற்கு மேல் அவரிடம் பேசும் அளவிற்கு சக்தி என்னிடம் இல்லை. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். கவலைப்படாதீர்கள் என கூறிவிட்டு வந்துவிட்டேன்.

ஏழைகளுக்கு உதவும் மார்க்கத்தில், வரதட்சணை ஒழிக்கின்ற மார்க்கத்தில், ஏற்ற தாழ்வு ஒழிக்கும் மார்க்கத்தில் இப்படியொரு முஸ்லிம் குடும்பம் வசிப்பது ஆச்சரியம் அல்லவா.? அதுவும் முஸ்லிம் கிராமம்.

மார்க்கம் எந்த கண்ணியமும் இழக்கவில்லை. அன்று எந்த அழகிய தத்துவத்தை இஸ்லாம் முன் வைத்ததோ, அதே தத்துவத்தை தான் தற்போதும் முன் வைக்கிறது.

ஆனால் இன்று அந்த மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களிடம் குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டது. ஒரு பெண்ணை அவளின் மார்க்கத்தை பார்த்து திருமணம் செய்யுங்கள் என வலியுறுத்தியது இஸ்லாம்.

ஆனால் இன்று குடும்ப அந்தஸ்தில் நமக்கு சரிசமமாக அல்லது கூடுதலாக இருக்க வேண்டும்.

பணத்தில் நமக்கு சரிசமமாக அல்லது கூடுதலாக இருக்க வேண்டும்.

இது வசதிபெற்றவர்கள், வசதி இல்லாதவர்கள் என அனைவரும் பின்பற்றும் ஒரு நடைமுறையாக மாறிவிட்டது. ஏழ்மையின் அடிமட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் பிள்ளையை கட்டிக்கொடுக்க ஒன்று பள்ளிவாசல் பள்ளிவாசலாக சென்று கரம் ஏந்த வேண்டும். இல்லை திருமணமே செய்யாமல் தியாகம் செய்ய வேண்டும் என்ற சூழல் மட்டுமே தற்போது உள்ளது. முன்பிருந்த அளவிற்கு தற்போது இல்லையென்றாலும் இன்னும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தில் உள்ளனர் என்பது நிதர்சனம்.

அல்லாஹ் நீயே போதுமானவன்...

Agm BASEER thankas

No comments:

Post a Comment