Sahab appakutty
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday, 29 November 2020
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில்பல்வேறு தடைகளை தாண்டி காயிதே மில்லத் நகர் பஸ் நிறுத்தம் முதல் உமர் ஊரணி சாலையே இணைக்கும் வகையில் தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்! தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது!வெற்றி என்பது மக்கள் பணி என்பதை உணர்ந்து அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.அதன் அடிப்படையில் பல்வேறு இடையூறுகளையும்,பல்வேறு தடைகளையும் தாண்டி இறைவன் உதவியுடன் இன்று புதுவலசை காயிதே மில்லத் நகர் பஸ் நிறுத்தம் முதல் உமர் ஊரணி சாலையை இணைக்கும் தார்சாலை அமைக்கும் பணி இனிதே துவங்கப்பட்டது.(வேளை நடைப்பெற்றுக் கொண்டுறுக்கிறது)என்றும் மக்கள் பணியில்....V.மிரான் ஒலிஊராட்சி மன்ற தலைவர்புதுவலசை
Wednesday, 18 November 2020
புதுவலசை ஊராட்சி குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய புதுவலசை பஞ்சாயத்திற்கு சாதனை சான்றிதழ் வழங்கிய துணை மாவட்ட ஆட்சியர் அவர்கள்!புதுவலசை பஞ்சாயத்தின் சார்பாக அரசால் கொண்டு வரப்பட்ட குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தி மரங்கள் நன்றாக வளர்த்து அரசின் திட்டத்தினை முழுமைப்படுத்தும் விதமாக குறுங்காடு வளரச் செய்த புதுவலசை பஞ்சாயத்து தலைவர் *V.மீரான் ஒனி* அவர்களுக்கு துணை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சாதனை சான்றிதழ் வழங்கி சிறப்பித்து உள்ளார்கள்.புதுவலசை பஞ்சாயத்திற்கு நற்சான்றிதழ் அளித்த துணை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் , அதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்து உறுப்பினர் களுக்கும் பணியாட்களுக்கும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பனியாட்களுக்கும் பஞ்சாயத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
Friday, 6 November 2020
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் மழை காலம் தொடங்கிய நிலையில் உமர் ஊரணி அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் புதியதாக மாற்றம் செய்யும் பணி புதுவலசை ஊராட்சி மன்ற தலைவர் V.மீரான் ஒனி அவர்களின் உத்வேகத்திலும் ஊர் இளைஞர்களின் உதவிகளோடும் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது... களப்பணியில் ஈடுபடும் சகோதரர்களுக்கும்,ஊரின் மேண்மைக்காக அயராது போராடும் தலைவர் அவர்களுக்கும் நன்றி கலந்த ஸலாத்தை தெறிவிப்பதுடன் பணி முழுமையாக வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெறிவித்துக்கொள்கிறோம்...இவன்புதுவலசை நண்பர்கள்...
Subscribe to:
Posts (Atom)