அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 9 March 2023

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். 

பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் பச்சரிசி நோன்பு கஞ்சியில் பகுதி அளவுக்கு கம்பு பனிவரகு தினை போன்ற சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். 

ஆண்மை கோளாறுகளும் இளம் பெண்களுக்கு இரத்தமின்மையும் கருப்பை கோளாறுகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. இது சந்ததி உருவாக்கத்தில் சிக்கல் ஏற்பட்டு விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
 
அதேபோல வளரும் பிள்ளைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடும் மனவலிமை இல்லாததும் நினைவுத்திறன் குறைபாடும் பரவலாக காணப்படுகின்றன. 

சமுதாயத்தில் கல்விப் பணியாற்றுபவர்களால் மட்டுமே இதை சரியான விகிதத்தில் புரிந்து கொள்ள முடியும். 

ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்கே அழிந்து போகிறது.

இந்த எல்லா சிக்கல்களையும் ஒருமாத நோன்புகஞ்சி தீர்த்துவிடாது. ஆனால் நோய்களின் சதிவலைகளிருந்து சமுதாயம் விலகி நிற்பதற்கான விழிப்புணர்வை நிச்சயம் இது ஏற்படுத்தும்.

சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து ஊரில் நோன்பு கஞ்சிக்கு தேவையான சிறுதானியங்களை ஆண்டுதோறும் தர்மமாக வழங்கினால் மஹல்லாவாசிகளின் மருத்துவ செலவுகள் பெருமளவு குறைந்துபோகும்.

உடலாலும் உள்ளத்தாலும் வலிமையான சமூகத்தால் மட்டுமே வணக்க வழிபாடுகளை அதிகரிக்கச் செய்ய முடியும். அல்லாஹ்வுடைய தீனையும் உம்மத்தையும் உயர்த்திட முடியும்.

நோன்புகஞ்சிக்கு அரசு வழங்கும் பச்சரிசியில் சரிபாதி சிறுதானியங்களை வழங்கிட கோரிக்கை வைக்க வேண்டும். இதனால் தமிழகத்தில் 30 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய  அன்பும் பாராட்டுக்களும் தமிழக அரசுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் என்பதையும் சேர்த்தே கவனத்தில் கொள்ள வேண்டும்.  

நோன்புக் கஞ்சியில் சிறுதானியங்களுடன் முருங்கை முடக்கற்றான் தூதுவளை ஆகிய கீரை வகைகளையும் ஒவ்வொன்றாக சிறிது சேர்த்துக் கொண்டால் ஆன்மாவோடு சேர்த்து உடலும் வலிமையடையும்.மிக முக்கியமாக படிக்கின்ற பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கும்.

இவையெல்லாம் பலநூறு ஆண்டுகளாக பள்ளிவாசல் நோன்புக்கஞ்சியில் இருந்த மூலப் பொருட்கள் தான். இடைக்காலத்தில் கொஞ்சம் மறந்துவிட்டோம்.

இப்போது காட்டாயத் தேவையாக மாறிவருகிறது.

உலமாக்கள் ஜமாஅத் நிர்வாகத்தினர் சமுதாயப் புரவலர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொஞ்சம் சிரத்தையெடுத்தால் மகத்தான மாற்றங்களை கண்முன் காணமுடியும்.

No comments:

Post a Comment