அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 7 June 2024

புதுவலசை விளையாட்டு மைதானத்தில் நடந்தது கடந்த கால நினைவுகள்

விளையாட்டு என்பது இன்று போல் அன்று இருக்கவில்லை. அது ஒரு கனா காலம். விளையாட்டிற்காக வாழ்ந்த காலம். இளைஞர்கள் என்றாலே, காலை மாலை என்று எந்நேரமும் நமதூர் திடல்கள் நிரம்பி வழிந்த காலம். 

அந்த காலகட்டத்தில் நடந்த விளையாட்டு போட்டிகள் மனதில் பதிந்து இருக்கும். அதில் ஒன்று 1990-களில் பனைக்குளத்தில் நடந்த கால்பந்து போட்டி. 

 பனைக்குளத்தில்  கால்பந்து டோர்ணமெண்ட்   அணியை பதிவு செய்யும் தேதி முடிந்து விட்டதால்  உங்கள் அணியை சேர்க்க வாய்ப்பு இல்லை என்றார்கள். அழைப்பு வரவில்லை. அதனால் என்ன? விளையாடாமல் இருக்க முடியுமா?.
 
போட்டிக்கன அட்டவணை வெளியானபோது அதில்  இரண்டாவது போட்டியாக மாலை 5 மணிக்கு பனைக்குளம் B டீமை எதிர்த்து சித்தார்கோட்டை டீம் விளையாடும்  என்பது சர்ப்ரைஸாக இருந்தது.

டோர்ணமெண்ட் தொடங்கியிருந்தது. மாலையில் போட்டி தொடங்குவதற்கு  முன்பு மைதானத்தின் ஒலிபெருக்கியில் சித்தார் கோட்டை அணியினார் மைதானத்திற்கு உள்ளே வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறது. என்ற அறிவிப்பு வந்த சில நிமிடங்களில்   சித்தார் கோட்டை டீமை சேர்ந்த 4 பேரும் அவர்களை தொடர்ந்து புதுவலசை டீமை சேர்ந்த 7 பேரும் உள்ளே வருகின்றார்கள். இந்த டிவிஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை.

வழக்கமாக  போட்டி நடத்துபவர்கள்  ஊருகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு கொடுப்பார்கள் இல்லை என்றால் நோட்டீஸ் மூலம் பொதுவான அழைப்பு  யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 

அழைப்பது என்பது அவர்கள் விருப்பம் சார்ந்தது இருந்தாலும் நம் ஊரைத் கடந்துதானே சித்தார் கோட்டை டீம் அழைக்கபட்டு இருக்க வேண்டும். அப்படி எனில் நம்மை தவிர்த்து இருக்கின்றார்களோ?  என்ற  எண்ணம் வந்தாலும் விளையாட்டில் இதெல்லாம் ரொம்ப சகஜம். போட்டிகளில் நாம் விளையாட வேண்டும்  என்ற ஆர்வம் மட்டும்  குறையவில்லை. 

" இந்த விளையாட்டு பண்பு  பொது நலனிலும் இருந்தால்  பெரிய மாற்றங்களை  சாதிக்கலாம்." சமூக சேவையில் இது முக்கியமான ஒரு அங்கம்.

போட்டிகள் தொடங்க சில நாட்கள்  இருந்த நிலையில் சித்தார் கோட்டை டீமை அனுகுவது என்று முடிவு செய்தார்கள்.  பலர்  முன்பே தெரிந்தவர்கள், பள்ளி தோழர்கள் என்பதினால் தொடர்பு கொள்வது சுலபமாக இருந்தது. சேர்ந்து விளையாடுவோம் என்ற கோரிக்கையை  கலந்து ஆலோசித்து சொல்லுவதாக சொன்னார்கள். மறுநாள் சேர்ந்து விளையாடுவோம் என்ற செய்தி வந்ததும் ஒரு பரபரப்பு.

அதே நேரம்  பொறுப்புடன் விளையாட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டுயிருந்ததால். மைதானத்திற்கு உள்ளே இறங்கியதும் ஒரு எலெக்ட்ரிக் பயர் தொற்றிக் கொண்டது.

 போர் படைகளை கிழித்து கொண்டு ஊடுருவி முன்னே செல்லும் தேர்களை போல் எதிரணியினர் கோல் போஸ்ட்டை நோக்கி  வீரர்கள்  முன்னேற  அவர்களின் கால்களில் சக்கரம் போல் பந்து  சுழன்று கொண்டிருந்தது எதிரணியை தினறடித்தது கொண்டிருந்தார்கள். 

முதல் வெற்றியை பதிவு செய்தார்கள்.  தொடர்ந்து தங்களது திறமையை நிரூபித்துக் கொண்டே இருந்தார்கள் ஒவ்வொரு போட்டிகளிலும். இறுதி போட்டி வரை யாரிடமும் தோற்க்கவில்லை.

 பைனல் மேட்ச் பெருங்குளம் டீமோடு   சமபலத்துடன்  மோதிக் கொண்டு இருக்கின்றது இரு அணிகளும்.  கோல் இன்றி ஆட்டம் முடிகின்றது.

அடுத்தாக எக்ஸ்ட்ரா டைம் கொடுக்க படுகின்றது. அதில் இரு அணிகளும் கோல் அடிக்க ஒன்றுக்கு ஒன்று என்ற நிலையில் ஆட்டம் முடிகின்றது.

 இறுதியாக ஒரு பத்து நிமிடம் கொடுக்கப்படும் இருவரும் சமநிலையில் இருந்தால் பெனால்டி ஷூட் அவுட் முறை என்று அறிவிக்கப்பட்டது.

  இரண்டு மணி நேரத்திற்கு மேலக விளையாடி கொண்டு இருக்கின்றார்கள் எனர்ஜி குறைந்து உடல் சோருவும் களைப்பும் அவர்களின் முகங்களில் அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. அதே நேரம் வெளிச்சம் குறைந்து இருள் மெல்ல படரவும் தொடங்கி இருந்தது.

 மீண்டும் போட்டி தொடங்கியது நேரம் போய்க் கொண்டு இருக்கின்றது யாரும் கோல் அடிக்கவில்லை. இருள் பார்க்கும் திறனை வெகுவாக குறைத்துக்கொண்டு  இருக்கின்றது. சிறிது நேரத்தில் அது இன்னும்  அதிகமாகி விளையாட முடியாத நிலைக்கு போய்விடும் என்ற டென்ஷன்.
 
 எல்லோரிடத்திலும் கடைசி நேர பரபரப்பு முழுத்திரணையும் களத்தில் வெளிப்படுத்தி வெல்ல கடும் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள் அப்பொழுது  தனக்கு கிடைத்த பந்தை  மிக திறமையாக அடித்து கோலாக மாற்றினார்  சித்தார் கோட்டை  கேப்டன் அல் சுவைரி.

கோப்பையை அணி கைப்பற்றியது வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு  cup சங்கத்திற்கு எடுத்து செல்லப்பட்டது நன்றியும், வாழ்த்துக்களும் C.K நண்பர்களுக்கு தெரிவித்து கப்புடன் வழி அனுப்பி வைத்தார்கள் அதன்பிறகு வெளி ஊருகளில் இருந்து பல அழைப்புகள். 


புதுவலசை அணிக்காக விளையாடியது.
*ஜாகிர் அலி* B.A.B.L (S/o. ஷேக் அமனூதீன்).  *ஜாவகர் அலி* (S/o. அகமது மீரா).  *ரஹ்மத்துல்லா* B.pham (S/o. அப்துல் ஹமீத்).  *சிக்கந்தர்* (S/o. காதர் ). *கதிரேசன்* (S/o. ராஜகோபால். தலைமை ஆசிரியர்). *அப்துல் யாசின்* (S/o. அப்துல் ஹமீத்).  *சுக்கூர்* (S/o. அபு ஹனீபா).   *ஷா மன்சூர்* (S/o. சீனி).  *ஜபருல்லா கான்* (S/o. சேகு பாஹ்ருதீன்).
(பெஸ்ட் Key players in Pvs கால்பந்து,கைப்பந்து,கிரிக்கெட்)

சித்தார் கோட்டை அணிக்காக விளையாடியது : 
*அல் சுவைரி ,சகாபுதீன்*(one of the best players in C.K.  கால்பந்து, கைப்பந்து,இறகு பந்து) *ரபீக், ஹுமாயுன் கபீர், சீனி அலிகான், பஹ்ரும்  கான், சதக்கத்துல்லா,* சிலரின் பெயர்கள் நினைவில் இல்லை.

அணி காம்பினேஷன் விளையாடுபவர்கள் வருவதை பொறுத்து மாறுபடும்.
-ar

No comments:

Post a Comment