திருப்பூர்: திருப்பூர் அருகே பங்குத்தரகர் ஒருவரது
வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.28,000 கோடி மதிப்பிலான அமெரிக்க கருவூல
கடன்பத்திரங்கள் போலியானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னையில்
இருக்கும் வெளிநாட்டு வங்கி கிளையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில்,கடந்த
டிசம்பர் 31 ஆம் தேதியன்று தாரபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது வீட்டில்
வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் பதுக்கி
வைக்கப்பட்ட கட்டுக்கட்டான அமெரிக்க கருவூல கடன்பத்திரங்களை பார்த்து
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்,அதனை பறிமுதல் செய்தனர்.இவற்றின் மதிப்பு சுமார்
ரூ.28,000 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக
நேரில் ஆஜராகுமாறு ராமலிங்கத்திற்கு வருமான வரித்துறையினர் சம்மன்
அனுப்பியிருந்தனர்.
அதன்படி அவர் இன்று சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள்
முன்னிலையில் தொழிலதிபர் ராமலிங்கம் ஆஜரானார்.
இதனிடையே ராமலிங்கத்திடம்
கைப்பற்றப்பட்ட அமெரிக்க கடன்பத்திரம் முக்கிய அரசியல் புள்ளி யாராவது ஒருவருடையதாக
இருக்கலாம் என்றும்,அவரது பினாமியாக ராமலிங்கம் செயல்பட்டிருக்கலாம் என்றும் புரளி
கிளம்பிய நிலையில், இது போலியான கடன் பத்திரமாக இருக்கலாம் என்று இது தொடர்பான
நிபுணர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 பில்லியன் டாலர் அளவுக்கு அதிக
மதிப்பிலான கடன்பத்திரங்களை அமெரிக்க கருவூலம் வெளியிடுவதில்லை என்றும், ஆனால்
ராமலிங்கத்திடம் கைப்பற்றப்பட்ட கடன்பத்திரம் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான
கடன்பத்திரமாக இருப்பதால் அது போலியானதாகத்தான் இருக்கும் என்றும் அவர்கள் கூறியதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
news.vikatan. thanks
No comments:
Post a Comment