சென்னை: திமுகவில் தனக்கு பின் மு.க. ஸ்டாலின் என்பது போன்று
கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளது குறித்து மு.க. அழகிரியிடம் கேட்டபோது, "திமுக
மடம் அல்ல; இந்த கேள்வியை கருணாநிதியிடம் போய் கேளுங்கள்...!" என்று ஆவேசமாக
கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த விழாவில் பேசிய திமுக தலைவர்
கருணாநிதி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள்
இருக்கும்வரை பாடுபடுவேன். அப்படியானால் அதன்பிறகு என்ற கேள்விக்கு பதில்தான் இங்கே
அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது" என்று
பேசினார்.
அவரது இந்த பேச்சு தனக்கு பிறகு திமுகவை வழிநடத்தி செல்லப்போவது
மு.க. ஸ்டாலின் தான் என்பதற்கான சூசகமான அறிவிப்பாகவே கருதப்பட்டது.
கருணாநிதியின் இந்த கருத்து திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்திய நிலையில், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியையும், அவரது
சகோதரரான மு.க. அழகிரியின் ஆதரவாளர்களிடையே குறிப்பாக மதுரையில்
அதிர்ச்சியையும்,அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மு.க.
அழகிரியை இன்று சந்தித்த செய்தியாளர்கள், திமுகவில் தனக்கு பின்னர் மு.க. ஸ்டாலின்
என்பதுபோன்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளாரே என்று கேட்டபோது,"திமுக ஒன்றும்
மடம் அல்ல...கருணாநிதி கூறியதுபற்றி நீங்கள் அவரிடமே சென்று கேளுங்கள்...!" என
ஆவேசமாக பதிலளித்தார்.
news.vikatan. thanks
No comments:
Post a Comment