
கோலாலம்பூர், 2
ஜனவரி- கடந்த வெள்ளிக்கிழமை புஞ்சாக்
செத்தியாவங்சா பகுதியில் பயங்கர நிலச்சரிவு
ஏற்பட்டதில் பல வீடுகள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில்
சீரமைப்புப் பணிகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதியின்
பாதுகாப்பு கருதி மேற்கொள்ளவிருக்கும் சீரமைப்புத் திட்டங்கள் குறித்து
விளக்கியபோது, இவ்விவரங்களை வெளியிட்டதாக செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோ சுல்ஹஸ்னான் ரஃபீக் தெரிவித்தார்.
தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தற்போது
சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அது நிறைவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட
பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தத்தம் சொந்த வீடுகளுக்குத்
திரும்புவதற்கான அனுமதியை மலேசிய பொதுப்பணி கழகம் (IKRAM) வழங்கும் என்றும்
சுல்ஹஸ்னான் ரஃபீக் குறிப்பிட்டார்.
vanakkammalaysia. thanks
No comments:
Post a Comment