-
ஜனவரி 03, 2013 at 8:29:41
AM

டில்லியில் அதிகபட்சமாக 9 புள்ளி 8 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இன்னும் 7 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் வட மேற்காக பாகிஸ்தான் மற்றும் ஆஃகனிஸ்தானில் இருந்து குளிர் காற்று வீசி வருவதே அடர்த்தியான பனிப்பொழிவு நிலவ காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனினும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி வட மாநிலங்கள் பலவற்றில் நிலவும் கடும் குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக குளிர் வாட்டுகிறது. இதனால், பொதுமக்கள் தெருக்களில் தீ மூட்டி குளிரைபோக்கி வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக, வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பல மணி நேர தாமதத்துடனேயே செல்கின்றன.
இதனால், ரயில் நிலையங்களில் பயணிகள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். நாள்தோறும் பிற்பகலுக்கு பின்னரே, பனிமூட்டம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment