பல் கட்டும்போது துளைபோடும் சிறிய ஆணி மூதாட்டியின் நுரையீரலுக்குள் புகுந்தது
[ 13:01:30 02-01-2013 ]
மத்திய சுவீடன் நாட்டின், வாஸ்டராஸ் பகுதியில் உள்ள
வாஸ்ட்மேன்லேண்ட் ஆஸ்பத்திரியில், செயற்கை பல் பொருத்திக் கொள்வதற்காக 60 வயது பெண்
ஒருவர் சென்றிருந்தார்.
சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவரது தேய்ந்து போன
பழைய பற்கள், சிறிய 'டிரில்லிங்' இயந்திரத்தின் மூலம் பொடியாக்கி அகற்றப்பட்டது.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இயந்திரத்தின் துளைபோடும் சிறிய ஆணி
கழன்று, அந்த பெண்ணின் தொண்டைக்குள் சென்று விட்டது. பதறிப்போன பல் டாக்டர்,
உடனடியாக அந்த பெண்ணை அவசர சிகிச்சை பகுதிக்கு அனுப்பி வைத்தார். எக்ஸ்-ரே
எடுத்துப் பார்த்ததில், அந்த ஆணி அவரது வலது பக்க நுரையிரலை துளைத்துக் கொண்டு
உள்ளே நுழைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 'ப்ரான்கோ
ஸ்கோபி' என்ற நவீன சிகிச்சையின் மூலம், அந்த பெண்ணின் நுரையீரலுக்குள், கேமராவுடன்
கூடிய கட்டிங் பிளேயரை டியூப் மூலம் செலுத்திய டாக்டர்கள், நுரையீரலுக்குள் இருந்த
3 சென்டிமீட்டர் நீளமுள்ள அந்த துளைபோடும் துணியை வெற்றிகரமாக அகற்றினார்கள்.
http://www.vesinhcongnghiep.us/?com=contact
ReplyDelete