மீண்டும் எகிப்தில் கலவரம் வெடித்தது: 7 பேர் பலி, 280 பேர் காயம்
[ சனிக்கிழமை, 26 சனவரி 2013, 10:18.56 மு.ப GMT ]
ஹோஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து
விரட்டப்பட்டு சரியாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எகிப்தில் கலவரம்
வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து
பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மக்கள் புரட்சியாக வெடித்த இந்த போராட்டத்தின் எதிரொலியால் முபாரக் பதவி
விலகினார். தற்போது தேர்தல் மூலம் முகமது முர்சி புதிய ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்டார்.
இந்நிலையில் முர்சி தனக்கு அதிகாரம் குவியும் வண்ணம் புதிய சட்டங்களை கொண்டு
வந்துள்ளார்.
இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள இந்நிலையில், மக்கள்
புரட்சியின் 2-ம் ஆண்டு நிறைவு நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, ஏற்கனவே போராட்டம் நடந்த கெய்ரோ தக்ரீக் மைதானத்தில் ஏராளமானவர்கள்
திரண்டனர்.
அப்போது தற்போதைய ஜனாதிபதிக்கு முர்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தக்ரீர் மைதானம் அருகேயுள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய
முயன்றனர்.
இதனால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை பொலிசார்
கலைத்தனர்.
இச்சம்பவத்தில் ஒருவர் பலியானதையடுத்து கலவரம் தீவிரம் அடைந்தது.
வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகை முடிந்ததும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள்
கெய்ரோ நகரின் தக்ரீர் மைதானத்தில் திரண்டனர்.
முர்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதே போன்று அலெச்சாண்ட்ரியா, சூயஷ்
உள்ளிட்ட பல நகரங்களின் தெருக்களில் போராட்டம் நடந்தது.
போராட்டக்காரர்களை அடக்க பொலிசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மீது கல் வீச்சு
நடந்தது. 2 அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் கூட்டணி கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அலுவலகமும் தீ வைத்து
எரிக்கப்பட்டது.
எனவே, கலவரத்தை அடக்க பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 7 பேர்
பலியாகினர், 280 பேர் காயம் அடைந்தனர்.
போராட்டக்கரர்கள் நடத்திய கல்வீச்சு உள்ளிட்ட தாக்குதலில் பொலிஸ்காரர் ஒருவர்
உயிரிழந்தார். 55 பேர் காயம் அடைந்தனர்.
No comments:
Post a Comment