January 26,
2013 05:11 pm
எகிப்தில் கடந்த 2011ம் வருடம் பெப்ரவரி மாதம் காற்பந்து
போட்டியில் நடைபெற்ற வன்முறையில் தொடர்புடைய 21 பேருக்கு எகிப்திய நீதிமன்றம்
மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வன்முறையில் 74 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நீதிமன்றத்தில் கூடியிருந்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், உற்சாகமாக கூக்குரைலிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
அல்-மஸ்ரி கிளப்பின் ரசிகர்களுக்கும், கெய்ரோவின் அல் அஹ்லி கிளப் ரசிகர்களுக்கும் இடையே அக்காற்பந்து போட்டியின் போது வன்முறை வெடித்தது.
கடந்த 15 வருடத்தில் உலகில் இடம்பெற்ற மிக மோசமான காற்பந்து போட்டி வன்முறையாக இது பதிவாகியிருந்தது. இவ்வன்முறை தொடர்பில் மேலும் 52 பேருக்கான தண்டனை விபரம் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது.
தற்போது மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் 9 பாதுகாப்பு படையினரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தின் மத தலைவர் முஃப்டியின் ஒப்புதலுக்காக தற்போது நீதிமன்ற தீர்ப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

thamilan thanks
No comments:
Post a Comment