
முதல்அமைச்சர்
ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவி பலி
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே என்று பாடிய பாரதி பிறந்த இந்திய
திருநாட்டின் தலைநகரில், ஒரு இளம் பெண் கொடூரமான, மிருகத்தனமான,
காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அதன் காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள துயரச்சம்பவம்
அனைவருக்கும் மிகுந்த துயரத்தையும், மன வேதனையையும் அளித்துள்ளது. பெண்களின்
உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழித்திடும்
வகையிலும், உலகத்திற்கே முன்னோடியாகஅனைத்து மகளிர் காவல் நிலையங்கள்ÕÕ, என்னால்
1992ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன.
பாலியல் பலாத்காரம் இல்லாத
மாநிலம்
பெண்களுக்கு எதிரான
குற்றங்களை ஒடுக்கும் வகையில்,தமிழ்நாடு பெண்கள் இன்னல் தடுப்பு சட்டத்தின்ÕÕ கீழ்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளை 2002ம் ஆண்டில் நான்
கடுமையாக்கினேன். இதன்படி, துன்புறுத்தலால் ஏற்படும் மரணம் மற்றும் தற்கொலை
ஆகியவற்றில் குற்றம் அற்றவர் என்று மெய்ப்பிக்கும் பொறுப்பு குற்றவாளிகளை
சார்ந்ததாக மாற்றி அமைக்கப்பட்டது.இவை காரணமாக மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்தாலும், பெண்களுக்கு
எதிரானகுற்றங்கள், அதிலும் குறிப்பாக, பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக தமிழகம்
திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.எனவே, பாலியல் குற்றங்களை தடுக்கும்
வகையில், கீழ்க்காணும் உத்தரவுகளை நான் பிறப்பித்துள்ளேன்.
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
விசாரணை
1.பாலியல் வன்முறை
வழக்குகள் கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, புலன் விசாரணை காவல் ஆய்வாளர்களால்
மேற்கொள்ளப்பட்டு, போலீஸ் துணை சூப்பிரண்டுகளால் நேரடியாக மேற்பார்வை செய்யப்படும்.
இயன்றவரை இவ்வழக்குகளில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொள்ளவும், இயலாத
சூழ்நிலையில் பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளவும்
நடவடிக்கை எடுக்கப்படும்.
2.இதுதவிர, மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டுகள், சரக காவல்துறை துணைத்தலைவர்கள் ஆகியோர் இவ்வழக்குகளின்
விசாரணையை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். இத்தகைய வழக்குகளில், வழக்கு பதிவு
செய்யப்பட்டது முதல் வழக்கு முடியும் வரை மாதந்தோறும் அவர்கள் ஆய்வு
செய்வார்கள்.
குண்டர் சட்டத்தில் திருத்தம்
குண்டர் சட்டத்தில் திருத்தம்
3.தற்சமயம் புலன்
விசாரணையிலும், நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் அனைத்து பாலியல் வன்முறை
வழக்குகளையும் மண்டல காவல்துறை தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து சட்டம், ஒழுங்கு
கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும்,
இவ்வழக்குகளை விரைந்து முடிப்பதில் தீவிரம் காட்டவும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
4.பாலியல்
பலாத்காரம் போன்ற கொடிய குற்றங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்
காரணத்தினால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும்
வகையில் குண்டர் தடுப்பு சட்டம் திருத்தி அமைக்கப்படும்.
மகளிர் விரைவு நீதிமன்றம்
5.பாலியல் வன்முறை
வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆகியவற்றை
விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
6.இந்த
நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞர்களாக பெண் வழக்கறிஞர்கள்
நியமிக்கப்படுவார்கள்.
7.பாலியல் வன்முறை
குற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்புகளை பெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்
வகையில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக தினசரி வழக்குகளை நடத்தி,
சாட்சி விசாரணைகள், வழக்கறிஞர்களின் வாதங்கள் ஆகியவற்றை முடிக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
ஆண்மை நீக்கம் செய்ய
சட்டதிருத்தம்
8.பாலியல் குற்ற
வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்கள் காவலுக்கு உட்படுத்தப்படும் காலம் ஒவ்வொரு
தருணத்திலும் 15 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை 30 நாட்களாக சட்ட
விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் இருப்பதை போன்று உயர்த்துவது, இதுபோன்ற
வழக்குகளில் குற்றவாளிகள் முன்ஜாமீன் பெறாமல் இருக்க வழிவகை செய்வது,
இவ்வழக்குகளில் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டால், வழக்கு விசாரணை முடியும் வரை
அவரை பிணையில் விடுவதை தடை செய்வது, பாலியல் வன்முறைக் குற்றங்களில்
ஈடுபடுபவர்களுக்கு கெமிக்கல் கேஸ்ட்ரேஷன் எனப்படும்வேதியியல் முறையில் ஆண்மை
நீக்கம்ÕÕ செய்யப்படுவது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக
மரண தண்டனை அளிப்பது ஆகியவை குறித்து சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு
கேட்டுக் கொள்ளப்படும்.
பயிற்சி வகுப்பு
9.பாலியல் வன்முறை
வழக்குகள், பெண்கள் இன்னல் தடுத்தல் சட்டம் மற்றும் குழந்தைகளை பாலியல்
குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் சட்டம் 2012 ஆகியன குறித்து காவல் உயர்
பயிற்சியகம், காவலர் பயிற்சி பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள்
ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.இந்த பயிற்சி வகுப்புகளில், பாலியல்
வழக்குகளில் சரியான விசாரணை நடத்துவது பற்றி மட்டுமின்றி, இக்குற்றங்களில்
பாதிக்கப்பட்டவர்களை கனிவுடனும், கண்ணியத்துடனும் நடத்துவது குறித்தும்
போதிக்கப்படும்.
பெண்கள் உதவி தொலைபேசி சேவை
10.பாலியல்
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களுடைய மருத்துவ சிகிச்சைக்கான மொத்த
செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதுடன், அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான
உதவிகளையும் செய்யும்.
11.பாதுகாப்பு
மற்றும் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் உதவி செய்யும் வகையில்
இலவச தொலைபேசி அழைப்பு சேவை இயங்கி வருவது போல், ஆங்காங்கு தனித்தனியே இயங்கும்
பெண்கள் உதவி தொலைபேசி சேவை, ஒருங்கிணைந்த சேவையாக தொண்டுள்ளம் கொண்டவர்களையும்,
பெண்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்களையும், அல்லாடும் மகளிருக்கு ஆலோசனை
அளிக்கும் பயிற்சி பெற்றவர்களையும் உள்ளடக்கிய அமைப்பாக நிறுவப்படும்.
கண்காணிப்பு கேமரா
12.சென்ற ஆண்டு
நடந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் எடுக்கப்பட்ட
முடிவின் அடிப்படையில், கடந்த மாதம் 14ந் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறையினால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பொதுக்கட்டிடங்கள் அனைத்திலும்
கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.அதனை
முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பெண்களுக்கு இன்னல் தரும்
நபர்கள் அல்லது அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அடையாளம்
காணப்படுவார்கள்.
சாதாரண உடையில் கண்காணிப்பு
13.மேலும்,
பொதுமக்கள் அதிகமாக நடமாடும் வணிக மையங்கள், பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற
இடங்களில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடியவர்களின் நடமாட்டத்தை சீருடை அணியாத
காவல்துறையினர் கண்காணித்து, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுப்பார்கள்.
பெண்கள் அச்ச உணர்வு இல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, பெண்களின் பாதுகாப்பிலும் அவர்களை கண்ணியத்துடன் நடத்துவதிலும் தங்களுக்கும் கடமை உள்ளது என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்ந்து எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் அச்ச உணர்வு இல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, பெண்களின் பாதுகாப்பிலும் அவர்களை கண்ணியத்துடன் நடத்துவதிலும் தங்களுக்கும் கடமை உள்ளது என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்ந்து எனது அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
as
.thedipaar. thanks
No comments:
Post a Comment