அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 30 January 2013

புதிய தலைமை செயலக கட்டிடத்தில் நவீன மருத்துவமனை செயற்படத் தொடக்கம்



சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்தில், பன் நோக்கு நவீன மருத்துவமனை செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழக அரசு தீவிர  முயற்சி எடுத்து இந்த நவீன மருத்துவ மனைபிரிவை உருவாக்கியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில், மிக பிரமாண்டமான முறையில் இந்த தலைமை செயலக கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால், இடப் போதாது என்று காரணம் காண்பித்து இப்போதைய அதிமுக ஆட்சி இந்த கட்டிடத்தை தலைமை செயலகமாக உபயோகிக்க முடியாது என்று கூறியதோடு, மருத்துவ மனையாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.

ஆனால் திமுக சார்பில் தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவ மனையாக மாற்றுவதற்குத் தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்  என்று  பொதுநல  வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணைக்கு, அரசின்  கொள்கை  முடிவில்  நீதி மன்றம் தலையிட முடியாது என்று கூறி நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதைத்  தொடர்ந்து  புதிய  தலைமை  செயலக  கட்டிடத்தை  மருத்துவ மனையாக மாற்றும் முயற்சிகள் தீவிரமடைந்தன.

இதன் ஒரு பகுதியாக அங்கு இருந்த அறைகளில் மாற்றங்கள் செய்யப் பட்டு நேற்று  காலை 10 மணி அளவில் புதிய நவீனப் படுத்தப்பட்ட பன் நோக்கு மருத்துவ மனை செயல்பட ஆரம்பித்து, அங்கு புதிய பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, பன் நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை நேற்று  காலை 10 மணிக்கு செயல்படத் தொடங்கியுள்ளது. .
 முதல்கட்டமாக நரம்பியல், இதயவியலுக்கு சிகிச்சை ஆரம்பித்துள்ளோம். 5,6 மருத்துவர்கள் பணியில்  உள்ளனர்  நோயாளிகளின்  வருகையைப்   பொறுத்து மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உள்ளோம். மேலும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.


4tamilmedia thanks

No comments:

Post a Comment