அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 30 January 2013

மலேசிய மாணவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 2013-2014ஆம் ஆண்டிற்கான கல்வி உபகாரச் சம்பளம்



மலேசிய மாணவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் 2013-2014ஆம் ஆண்டிற்கான கல்வி உபகாரச் சம்பளம்
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 30 –இந்திய அரசாங்கம் மலேசிய இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்துள்ளது. இளங்களை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் இந்திய மாணவர்களுக்கு மொத்தம் 8 உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படவுள்ளன.

“Indian Council for Cultural Relations (ICCR)” கீழ் 6 உபகாரச்சம்பளமும், “Genaral Cultural Scholarship Scheme (GCSS)” கீழ் 2 உபகாரச்சம்பளமும் வழங்கப்படவுள்ளது.
பொறியியல், கட்டிடக்கலை, வணிகம், கலை, ஹாட்டல் நிர்வாகம், சட்டம், இசை, விவசாயம் சம்மந்தப்பட்ட துறைகளுக்கே இந்த உபகாரச்சம்பளம் வழங்கப்படவுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் துறைகளுக்கு கல்வி பயில விரும்புபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. உபகாரச் சம்பளம் வழங்கப்படுகின்ற துறைகள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் குறித்த முழு விவரங்கள் விண்ணப்ப பாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
கல்வி கட்டணம், தங்கும் விடுதி, அன்றாடச் செலவுகள் மற்றும் கல்விக்கு தேவையான இதர செலவுகளுக்கு இந்த உபகாரச்சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கல்வி பயின்ற அனுபவம் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் ஆங்கில மொழியில் புலமை பெற்றிருத்தலும் அவசியமாகும்.
விருப்புமுள்ளவர்கள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து இந்திய உயர் ஆணைக்குழவின் கல்வி செயலகத்திற்கு (Education Wing, High Commission of India) அனுப்பி வைக்க வேண்டும்.
மேல் விவரங்களுக்கு :
முகவரி
High Commission of India, Menara 1 Mont Kiara, Level 28, No 1, Jalan Kiara, Mont Kiara, 50480 Kuala Lumpur.
தொலைப்பேசி
03-6205 2350 ext 203
தொலைநகல்
03-6143 1192
மின்னஞ்சல்   



vanakkammalaysia thanks

No comments:

Post a Comment