அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 29 January 2013

மெரினா கடற்கரையின் அழகை சீர்குலைக்கும் கடைகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை.


30  January  2013  
www.thedipaar.com

மெரினா கடற்கரையில் கடைகள் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரை

சென்னையை சேர்ந்தவர் கே.பாலாஜி. காந்திஜி நுகர்வோர் அமைப்பின் தலைவரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–சென்னை மெரினா கடற்கரை உலகத்திலேயே 2–வது மிக நீளமான, அழகான கடற்கரை ஆகும். இந்த கடற்கரையின் புனிதம் மற்றும் அழகை பாதுகாக்கவும், மெரினா கடற்கரையை சர்வதேச தரத்துக்கு உயர்த்தவும் கடற்கரை பகுதிகளில் எந்தவித கட்டிடத்துக்கும் அனுமதி அளிப்பது இல்லை என்று 2006–ம் ஆண்டு அரசு முடிவு எடுத்தது. தற்போது மெரினா கடற்கரை பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.


மோசமாக உள்ளது

கடை நடத்துபவர்கள் கழிவுகளை கடற்கரை பகுதியில் கொட்டுகின்றனர். இதனால் மெரினா கடற்கரை மிக மோசமாக உள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தை முறையாக அமல்படுத்தாத காரணத்தால் கடற்கரை பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தரமற்ற இந்த உணவு பொருட்களை உண்பதால் உடல்நலக்கேடு ஏற்படுகிறது. எவ்வித அனுமதியும் இல்லாமல் இந்த கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.மெரினா கடற்கரை சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதால் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் மெரினாவுக்கு வர தயங்குகின்றனர். இதை சுட்டிக்காட்டி மாநகராட்சி ஆணையாளருக்கு மனு கொடுத்தேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மெரினா கடற்கரையில் கடைகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, மெரினா கடற்கரை பகுதியில் கடைகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இடைக்கால தடை

இந்த மனு தலைமை நீதிபதி(பொறுப்பு) எலிப்தர்மராவ், நீதிபதி அருணாஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், மெரினா கடற்கரையில் கடைகள் நடத்த 4 வாரத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு சம்பந்தமான சென்னை மாநகராட்சி ஆணையாளர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

thedipaar thanks

No comments:

Post a Comment