அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 29 January 2013

சைவ பிரியாணி கேட்ட வைஷ்ணவி கோவில் பக்தருக்கு எலி பிரியாணி வழங்கிய இரயில்வே நிர்வாகம்.


30  January  2013  
www.thedipaar.comகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களுக்கு ரயிலில் எலி பிரியாணியை வழங்கியது ரயில்வே நிர்வாகம்.


குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் நிலேஷ்படேல் தனது மனைவி வீணா மற்றும் இரண்டு மகன்களுடன் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு சர்வோதயா ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.

ரயிலில் உள்ள உணவகத்தில் மூன்று வெஜ் பிரியாணிக்கு ஆர்டர் செய்திருந்தார், ஒரு பார்சலை பிரித்து உண்ண தயாரான போது அதில் எலி ஒன்று இருந்ததை கண்டு அதிர்‌ச்சியடைந்தார். இதனையடுத்து மீண்டும் வேறு ஒரு பார்சலுக்கு ஆர்டர் தந்தார். ஆனால் அதற்குள் விசயம் கேள்விப்பட்ட மற்ற பயணிகள் கோபத்துடன் தங்கள் செல்போனில் ‌எலி கிடந்த பார்சலை சாட்சியாக படமெடுத்து வைத்து கொண்டனர். தொடர்ந்து ரயில் வே ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து ரயில்வே போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் ரயில் புதுடில்லிக்கு வந்து சேர்ந்த போது ரயில்வே உணவக மேலாளருக்கு முறைப்படி புகார் மனு அளித்தார் நிலேஷ்படேல். தொடர்ந்து உணவக மேலாளர் பயணிகளுக்கு ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் அதற்கு தான் பொறுப்பேற்று ‌கொள்வதாக கைபட மன்னிப்பு கடிதம் எழுதி தந்‌ததையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. 

thedipaar thanks

No comments:

Post a Comment