அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 28 January 2013

விண்வெளிக்கு வெற்றிகரமாக குரங்கினை அனுப்பியது ஈரான் (வீடியோ இணைப்பு)

[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 03:41.04 மு.ப GMT ]
விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி வெற்றிகரமாக ஈரான் சோதனை நடத்தியுள்ளது. ஈரான் கடந்த 2011ஆம் ஆண்டு விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி சோதனை செய்தது, எனினும் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து மேற்குலக நாடுகளுக்கு போட்டியாக தானும் அறிவியலில் முன்னேற்றம் அடைய 2020ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.
இந்நிலையில் நேற்று தலைநகர் டெஹரான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, 2000 கிலோ எடை கொண்ட கவோஸ்ஹர் ராக்கெட் மூலம் பிஸ்காம் என்ற விண்கலத்தினுள் குரங்கினை வைத்து விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக ‌சோதனை செய்ததாக ஈரான் குடியரசு தொலைக்காட்சி சானல் அதிகாரப்பூர்வமான வீடியோ காட்சியுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஈரான் இராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், முதலில் நடத்திய சோதனை தோல்வியடைந்தது, இப்போது வெற்றி பெற்றுள்ளோம்.
அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் ஷெரீப்பாஸ்ட் விண்கலம் மூலம் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு‌ள்‌ளோம் என்று அறிவித்துள்ளது.

newsonews thanks

No comments:

Post a Comment