என்னை செல்லாக்காசு
என, நிதி அமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார். செல்லாக்காசு யார் என்பது, விரைவில்
உலகிற்கு புரியும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 

அவரது அறிக்கை: வழக்குகள் வாயிலாக பயமுறுத்தி, மிரட்டி, எதிர்க்கட்சிக்காரர்களை ஆளுங்கட்சியிலே சேர்ப்பதற்கான முயற்சியில், இந்த அரசு ஈடுபடுகிறது. அ.தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய, முதல்வர் ஜெயலலிதா, "எம்.ஜி.ஆர்., பொறுப்பில் இருந்தபோது, கட்சியில் இருந்த நிதி, 1 லட்சம்; இப்போது, 118 கோடி ரூபாய் சொத்து உள்ளது' என, பேசியுள்ளார்.
பன்னீர் செல்வம் விமர்சனம் :
எம்.ஜி.ஆரின்
திறமையையும், தன்னுடைய திறமையையும், ஒப்பிட்டுக் காட்டுவதற்காக அதைக்
கூறியிருக்கிறார் போலும். இந்த அளவிற்கு, சொத்து சேர்க்கும் திறமை யாருக்கும் இல்லை
தான். என்னை செல்லாக் காசு என, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சனம்
செய்திருக்கிறார்.
அவர் நிதி அமைச்சர் என்பதால், காசைப் பற்றி பேசியிருக்கிறார். நான் தான் செல்லக் காசு ஆயிற்றே; பின் ஏன் பொதுக் குழு முழுவதும், என்னைப் பற்றியே பேசி என்னைக் கண்டித்து ஏன் தீர்மானம்... தற்கொலை செய்து கொண்ட ஒருவர், தன் சாவுக்கு, அமைச்சரின் தம்பி தான் காரணம் என, தன் கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்த வழக்கின் மீது, நடவடிக்கை எடுக்காமல், கோர்ட் வரை சென்ற பின், அந்த வழக்கையே இல்லாமல் செய்வதற்கான முயற்சியிலே ஈடுபடுபவர்களுக்கு, என்னைப் பார்த்தால் செல்லாக் காசாக தான் தெரியும். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம், விரைவில் வரும். அப்போது, செல்லாக் காசு யார் என்பது உலகிற்கு புரியும். இவ்வாறு, அவர் கூறினார்.
as
thedipaar. thanks
No comments:
Post a Comment