
புதுடெல்லி, ஜன. 4-
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் கொடுமைக்கு ஆளாகி பலியானார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களுக்கு பாதுகாப்பு
வழங்கவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை
எழுந்தது.
பாலியல் குற்றங்களுக்குரிய சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. இதற்கான சிறப்பு விசாரணைக்குழுவும், விரைவு நீதிமன்றங்களும் மத்திய
அரசால் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் சில
மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அங்கு மொத்தம் 166 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரம் பெண் போலீசார்
உள்பட 83 ஆயிரம் போலீசார் பணியாற்றுகின்றனர். இப்போது கூடுதல் போலீசார்
நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே
டெல்லியில் நிருபர்களிடம் கூறும்போது, டெல்லியில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும்
2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களையும், 7 பெண் போலீசாரையும் நியமனம் செய்யும் உத்தரவில்
கையெழுத்திட்டுள்ளேன்.
மேலும் பெண்களின் பாதுகாப்பை அதிகரித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்
விதமாக அதிக அளவில் பெண் காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் திட்டம் உள்ளது
என்றார்.
maalaimalar thanks
No comments:
Post a Comment