தலைநகர் டெல்லியில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
கடுங்குளிர் வாட்டி வருவதால் வரும் 12ம் தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
கடுங்குளிர் வாட்டி வருகிறது. இன்று அதிகபட்சமாக 12.7 டிகிரியும், குறைந்த அளவாக
4.4 டிகிரியும் பதிவானது. இந்த கடும் குளிர் மற்றும் மூடுபனியினால் போக்குவரத்து
பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த கடுங்குளிர் காரணமாக
மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால்,
வரும் 12ம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீண்டும் பள்ளிகள் 14-ம்தேதி
திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அரசு பள்ளிகள்
மட்டுமின்றி, மாநகராட்சி, டெல்லி கண்டோன்மென்ட் போர்டு, அரசு உதவி பெறும், உதவி
பெறாத தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
tamilantelevision. thanks
No comments:
Post a Comment