கடன்
வழங்கிய ஜெர்மன் நாட்டு வங்கி கேட்டதற்கு இணங்கவே இந்த கப்பல்
தடுத்துவைக்கப்பட்டுள்ளது. காரணம், எம்.வி சியர் எனும் பெயரில் பதிவு
செய்யப்பட்டுள்ள இந்த கப்பல், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை பணத்தை
கட்டவில்லை. அத்துடன், எம்.வி சியர் எனும் பெயரில் கடன் எடுத்துவிட்டு, கப்பலின்
பெயரை எம்.வி அமினா என மாற்றியிருக்கிறார்கள்.
இந்த
மாற்றம், கடன் கொடுத்த வங்கிக்கு தெரியப்படுத்தப்படவில்லை.. இந்த கப்பல்
சீனாவிலிருந்து நவம்பர் 18-ம் தேதி புறப்பட்டு வந்து, இலங்கையின் காலி
துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டு நின்றபோது, இலங்கை அதிகாரிகள்,
கப்பலினதும், ஊழியர்களினதும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் இந்தக்
கப்பலில் உள்ள இந்திய மாலுமி போசுன் யேசுராஜ், இருதய நோயால்
பீடிக்கப்பட்டுள்ளார்.
இவரை
சிகிச்சைக்காக வெளியே அனுப்ப விரும்பாத கப்பல் கேப்டன், அவருக்கு கப்பலிலேயே
சிகிச்சை அளித்து வருகின்றார். இந்த கப்பலிலுள்ள இந்திய மாலுமிகள், தமது ஒப்பந்த
காலம் முடிவடைந்து விட்டது எனவும், தொடர்ந்து இந்த கப்பலில் வேலை செய்ய
விரும்பவில்லை எனவும் கூறியுள்ளனர். இந்தக் கப்பல் பற்றியும், அதில் உள்ள இந்திய
மாலுமிகள் பற்றியும் ஆனந்த் என்பவர் ஒரு எஸ்.எம்.எஸ். செய்தியை அனுப்பிய நிலையில், அந்த
எஸ்.எம்.எஸ். மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசனுக்கு பார்வர்ட்
செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய கப்பல்துறை அமைச்சு
அதிகாரிகளும் இது பற்றி அறிந்துள்ளனர். மத்திய கப்பல் துறை அமைச்சு அதிகாரிகள்,
இலங்கை கடல் பகுதியில் தற்போது உள்ள இந்த கப்பலில் இருந்து தம்மை மீட்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளார்கள்
மாலுமிகள்.
News :Source
/eutamilar. thanks
No comments:
Post a Comment