|
2012-ல் உலகை உலுக்கிய சம்பவங்கள் |
2012-இந்த வருடத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆம் வரலாற்றின்
மிக முக்கியமான இடத்தில் 2012 இருக்கும் என்றால் அதில் ஜயமில்லை. இந்த ஆண்டில்
உலகம் சந்தித்த சாதனைகளும், சர்ச்சைகளும், சவால்களும் மிகவும் ஏராளம். 2012
என்றதுமே உலக மக்கள் அனைவரின் மனதிலும் உதித்த எண்ணம் 21.12.2012 அன்று உலகம்
அழிந்துவிடும் என்பதுவே.
ஒரு பக்கம் அறிவியல் ரீதியான சான்றுகளும், நாசாவின் தகவல்களும் மறுபக்கம் உலக
முடிவைக் காட்டும் மாயன் காலெண்டர் என மக்களை சற்று புரட்டித்தான் போட்டன. மிகுந்த
சர்ச்சையையும், பயத்தையும் ஏற்படுத்திய விடயம் என்றே சொல்லலாம்.
இதுதவிர சிரியா, ஈரான் இரகசியமான அணு ஆயுதத்தை தயாரிப்பது, அமெரிக்காவில்
ஜனாதிபதி தேர்தல், புயல்- சூறாவளி, பாலஸ்தீனத்துக்கான அங்கீகாரம், தென் சீன கடல்
விவகாரம், எல்லை பிரச்னை, ஆப்கான்- ஈரான்- பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள்
என அனைத்துமே உலகை அச்சுறுத்தி கொண்டு இருந்தன. எனினும் இதற்கு மத்தியிலும் பல்வேறு
சாதனைகளும், விஞ்ஞான ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக மனிதர்கள் அதி உச்சத்தை அடைந்து
கொண்டிருந்தனர் என்றால் அது மிகையல்ல.
ஜனவரி 18 - வீக்கிபீடியா வேலைநிறுத்தம்இன்றைய நவீன
உலகில் எந்த தகவல்களையும், எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும்
பெறலாம் என்ற அளவுக்கு முன்னேறி வந்துள்ளோம். இதே நேரத்தில் இணையத்தில் தகவல்கள்
திருடப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தகவல் களஞ்சியமான
விக்கிபீடியா, ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டது. . வீக்கிபீடியா
இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்
ஜனவரி 26 - பூமியை தாக்கிய சூரியப்புயல்உலக அழிவை
நினைவூட்டும் விதமாக 2012ம் ஆண்டில் பல்வேறு அரிய கிரகணங்களும், சூரியப் புயல்களும்
பூமியை தாக்கின. குறிப்பாக ஜனவரி மாதமே பூமியின் வடமுனையை சூரியப் புயல் தாக்கி
மக்களை அச்சுறுத்தியது. இதனால் வானில் பிரகாசமான ஒளி தோன்றியதுடன், அயர்லாந்து,
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நோர்வே போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது.
இதேபோன்று மார்ச் மாதம் 8ம் திகதியும் மற்றொரு சூரியப்புயல் பூமியை தாக்கியது.
இதனால் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
1. பூமியின்
வடமுனையை தாக்கியது சூரியப் புயல்: வானில் பிரகாசமான ஒளி தோன்றியது 2. பூமியை
தாக்கியது சூரியப் புயல் (வீடியோ இணைப்பு)
பெப்ரவரி 12 - இசை உலகின் தங்க பெண் மரணம்பிரபல
பொப் இசை பாடகியும், ரசிகர்களால் செல்லமாக இசை உலகின் தங்க பெண் என்றும்
அழைக்கப்பட்ட ஒய்ட்னி ஹோஸ்டன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதன் பின்
நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருளை அதிகளவு உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என
தெரியவந்தது. இருப்பினும் இவரது மரணம் ரசிகர்கள் மட்டுமல்லாது, இசைத்துறைக்கும்
பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல
பொப் பாடகி ஹூஸ்டனின் இறுதிச்சடங்கு
மார்ச் 04 - ரஷ்யா ஜனாதிபதி தேர்தல்ரஷ்யாவில் நடந்த
ஜனாதிபதி தேர்தல், விளாடிமிர் புடின் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக
ஜனாதிபதியானார். இத்தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பெற்று, புடின் அபார வெற்றி
பெற்றார். எனினும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, எதிர்க்கட்சியினர்
ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் செர்ஜி
உள்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின் விடுதலை
செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய
ஜனாதிபதி தேர்தல்: புதின் அபார வெற்றி
ஏப்ரல் 01 - மியான்மர் நாடாளுமன்ற தேர்தல் 2012ஆம்
ஆண்டில் மியான்மர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முக்கிய இடத்தை பிடித்தது. ஏனெனில் 15
ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த, ஜனநாயகப் போராட்டத் தலைவர் ஆங் சான்
சூகி போட்டியிட்டார். இத்தேர்தலில் மக்களின் பேராதரவுடன் ஆங் சாங் சூகி அபார வெற்றி
பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதன்பின் மியான்மரில் பல்வேறு கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டதுடன், உலக நாடுகளும் மியான்மர் மீதான தடையை சற்று தளர்த்தின.
1. மியான்மர்
இடைத்தேர்தல்: ஆங் சான் சூகி வெற்றி 2. ஆங்
சாங் சூகி இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஏப்ரல்
15 - டைட்டானிக் 100வது நிறைவு தினம் 1514 பேரை பலி கொண்ட
டைட்டானிக் கப்பல் மூழ்கி, 100 ஆண்டுகள் நிறைவடைந்தது அனுசரிக்கப்பட்டது. இந்த
நிகழ்வின் ஒரு பகுதியாக டைட்டானிக் கப்பல் விபத்தில் பலியான நபர்களின்
குடும்பத்தினர் அனைவரும் இணைந்து, பயணிகள் கப்பல் ஒன்றில் சவுதாம்ப்டன்
துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். இவர்கள் சரியாக அதிகாலை 2.20 மணிக்கு
கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
டைட்டானிக்
கப்பல் விபத்து: 100ஆம் ஆண்டு நிறைவு தினம் இன்று
அனுசரிப்பு மே 07 - பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்
பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசியை
தோற்கடித்து, பிராங்காய்ஸ் ஹோலண்டே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கடந்த
1995ஆம் ஆண்டிற்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி சார்பில் தெரிவான முதல் ஜனாதிபதி என்ற
பெருமையை ஹோலண்டே பெற்றார்.
பிரான்சின்
ஜனாதிபதியானார் ஹோலண்டே
யூன் 02 - எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு தண்டனை
எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி
முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக முபாரக் பதவி
விலகினார். இதனையடுத்து இவர் மீது போராட்டம் நடந்த காலகட்டத்தில் 846 பேரை கொன்று
குவித்தது உட்பட பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டது. இதில் முபாரக்கிற்கு ஆயுள்
தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர் தவிர மகன்கள் அலா, கமால்
முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல்- அட்லி மற்றும் 6 அதிகாரிகளுக்கும் ஆயுள்
தண்டனை வழங்கப்பட்டது.
846
பேரை கொன்ற வழக்கு: எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முபாரக்கிற்கு ஆயுள்
தண்டனை
யூன் 05 - ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டம்
இந்த ஆண்டில் பிரிட்டன் மட்டுமல்லாது உலகளவில் பெரும்பாலான
மக்களின் கொண்டாட்டமாக இருந்தது ராணி எலிசபெத்தின் வைர விழா தான். பிரிட்டன் ராணி
எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, வைர விழா நிகழ்வுகள்
பல்வேறு நாடுகளில் நிகழ்ந்தன. இவ்விழாவின் ஒரு பகுதியாக பிக் பென் கோபுரத்தின்
பெயர் எலிசபெத் கோபுரமாக மாற்றப்பட்டது. மேலும் இளவரச தம்பதிகளான வில்லியம்- கேத்
மிடில்டன் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
1. ராணியின்
வைரவிழா கொண்டாட்டம்: தேம்ஸ் நதிக்கரையில் படகுச்சவாரி2. பிரிட்டனில்
ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் தொடங்கியது
ஓகஸ்ட் 06 - நாசாவின் கியூரியாசிட்டி செவ்வாய்
கிரகத்தை ஆராய்வதற்காக, நாசாவால் அனுப்பப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் 8 மாத
பயணத்திற்கு பின்னர், வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதன்பின்
அங்குள்ள பாறைகளையும், மண்ணையும் ஆய்வு செய்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து
அனுப்பியது. இப்படங்களின் மூலம் நாசா விஞ்ஞானிகளுக்கு செவ்வாய் கிரகத்தில்
மனிதர்கள் வாழலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.
1. செவ்வாய்
கிரகத்தில் தரையிறங்கியது க்யூரியாசிட்டி: முதல் படத்தை எடுத்து
அனுப்பியது2. செவ்வாய்
கிரகத்தில் மனிதக்குரல்: கியூரியாசிட்டி சாதனை
ஓகஸ்ட் 15 - அசாஞ்ச் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம்
அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் இராணுவ இரகசியங்களை வெளியிட்டு
பரபரப்பை ஏற்படுத்தியவர் அசாஞ்ச். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்த போதிலும்,
சுவீடனில் பாலியல் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இவரை கைது செய்யும் படி
சுவீடன் அரசு உத்தரவிடவே, பிரிட்டன் பொலிசார் அசாஞ்சை கைது செய்ய முயன்றனர்.
கைதிலிருந்து தப்பிக்க, லண்டனிலுள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அதன்பின்
ஈக்வடார் அரசும் இவருக்கு தஞ்சமளிக்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில் 2013ஆம் ஆண்டில்
அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.
1. அசாஞ்சை
கைது செய்வது தற்கொலைக்கு சமம்: ஈக்வடார் ஜனாதிபதி2. தேர்தலில்
போட்டியிட விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் முடிவு
ஓகஸ்ட் 26 - நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம் நிலவில் முதன்
முதலில் காலடி எடுத்து வைத்தவர் என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல்
ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.
நிலவில்
முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்(வீடியோ இணைப்பு)
ஒக்ரோபர் 09 - மலாலா துப்பாக்கி சூடு பாகிஸ்தானில்
பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களுக்கு எதிராகவும் போராடிய மலாலா மீது
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மிக மோசமான நிலையில் பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்ட
மலாலாவுக்கு, லண்டனில் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் இச்சிறுமியின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய், ஐ.நா சபையின் சர்வதேச
கல்விக்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மலாலா தலிபான்களுக்கு எதிராக
பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இன்று
மலாலா நாள்: ஐ.நா கௌரவிப்பு(வீடியோ இணைப்பு)
ஒக்ரோபர் 29 - சாண்டி புயலின் கோரத் தாண்டவம்
வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் சேதத்தை
ஏற்படுத்தியது சான்டி புயல். இப்புயலால் 5 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டதுடன், 12 மாகாணங்கள் முழுமையாக சேதமடைந்தது. இதனால் 13 ஆயிரம் விமான
சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் உட்பட 8 இடங்களில்
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவை
புரட்டி போட்ட சான்டி புயல்: மீட்பு பணிகள் தொடக்கம்
நவம்பர் 06 - அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல்2012ஆம்
ஆண்டு முழுவதுமே அமெரிக்கா மக்கள் முணுமுணுத்த விடயம் நாட்டின் அடுத்த ஜனாதிபதி
யார்? என்பது தான். இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசு
கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர்
தாக்கியதுடன், பல்வேறு சலுகைகளையும் மக்களுக்கு அறிவித்தனர். முடிவில் 303
வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானார் பராக் ஒபாமா.
வாக்களித்த
மக்களுக்கு நன்றி: ஒபாமாவின் வெற்றி உரை (வீடியோ இணைப்பு)
நவம்பர் 18 -யாசர் அரபாத் மரணத்தில் சர்ச்சை
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத், பாரிஸ் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தார்.
இதனையடுத்து இவரது உடைகளை ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள், பொலோனியம்
விஷம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இவரது உடலை மீண்டும்
தோண்டியெடுத்து ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இவரது கல்லறை
உடைக்கப்பட்டது.
இன்று
யாசர் அராபத்தின் கல்லறை உடைப்பு
நவம்பர் 30 - பாலஸ்தீனத்திற்கு அந்தஸ்துஐ.நாவில்
முதன் முறையாக உறுப்பினர் அல்லாத கண்காணிப்பாளர் அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு
வழங்கப்பட்டது. எனினும் இத்தீர்மானத்தை அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி உட்பட 9
நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், இஸ்ரேல்
எல்லைப்பகுதியில் 3000 வீடுகளை கட்ட தீர்மானித்தது. இஸ்ரேலின் இத்திட்டத்திற்கு உலக
நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
1. பாலஸ்தீனத்தை
அங்கீகரிக்க ஐ.நாவில் வாக்கெடுப்பு: அமெரிக்கா, ஜேர்மனி எதிர்ப்பு2. பாலஸ்தீனத்திற்கு
எதிராக 3000 வீடுகளை கட்டுகிறது இஸ்ரேல்: அமெரிக்கா கடும் கண்டனம்
டிசெம்பர் 04 - இளவரசி கேட் கர்ப்பம் பிரிட்டன்
இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமானது பிரிட்டன் மக்கள் மட்டுமல்லாது உலகம்
முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. குறிப்பாக
சூதாட்டக்காரர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது என்றே சொல்லலாம். உலகம்
முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. மகிழ்ச்சியான
தருணத்திற்கு மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திய விடயம், கேட் மிடில்டன்
கர்ப்பதிற்காக சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஜெஸிந்தா
மர்மமான முறையில் இறந்தது தான்.
1. இளவரசி
கேட் மிடில்டன் கர்ப்பம்: அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது2. செவிலியர்
மரணம்: கண்ணீருடன் வருத்தம் தெரிவித்த அறிவிப்பாளர்கள்
டிசம்பர் 14 - அமெரிக்க படுகொலை அமெரிக்காவின்
கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில், 20 வயது மதிக்கத்தக்க நபர் ஆடம்
லான்சா நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அமெரிக்காவில் உள்ள துப்பாக்கி சட்டத்திற்கு எதிராக பெரும் கண்டனங்களும்
எழுந்தன.
1. அமெரிக்காவில்
பயங்கரம்: 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி (வீடியோ இணைப்பு)
நாட்டை உருகுலைக்கும் முடிவில்லா பிரச்சனை - சிரியா
2012-ல் மிக முக்கியமாக துனிஷியாவில் தொடங்கிய அரபு நாடுகளின் போராட்டம்
எகிப்து, பஹ்ரைன், லிபியா என ஆரம்பித்து சிரியா வரை சென்றது. சிரியா ஜனாதிபதி
அசாத்துக்கு எதிராக மக்கள் கடந்த 21 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க சிரியா அரசு நடத்திய தாக்குதல்களில் இதுவரையிலும் 40
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் அண்டை
நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
குறிப்பாக சிரியா அரசு பொதுமக்கள் மீது இரசாயன குண்டுகளை பயன்படுத்தி வருவதாக
குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இரத்தம் என்ற நிலையே
சிரியாவில் உள்ளது. குறிப்பாக ஒன்றுமே அறிந்திராத பச்சிளம் குழந்தைகளையும், அப்பாவி
பொதுமக்களையும் குறிவைத்து தான் தாக்குதல்கள் நிகழ்கின்றன.
இவர்கள் தவிர செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கும் இதே கதிதான்.
சிரியாவில் மட்டும் இந்த ஆண்டு 36 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
hits |
|
No comments:
Post a Comment