அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 25 January 2013

புதன்கிழமைகளில் பெண்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?


புதன்கிழமைகளில் பெண்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?


January 25, 2013  07:36 pm
பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு புதன்கிழமை, பிற்பகல், 3:30 மணிக்கு தங்களின் இயல்பான வயதை விட மிகவும் வயதானவர்களாகத் தோற்ற மளிக்கின்றனர்´ என, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. புதன்கிழமைகளில் கடும் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. வாரக் கடைசியில் ஏற்பட்ட அழுத்தமும், புதன்கிழமைகளில் ஒன்றாக சங்கமிப்பதால், அன்றைய தினத்தில், பெண்கள், அவர்களது இயல்பான வயதைக் காட்டிலும் அதிக வயது உடையவர்களாகத் தெரிகின்றனர். 


இது தொடர்பாக பெண்களிடம் நடத்திய ஆய்வில், 12 சதவீதம் பேர், புதன்கிழமைகளை அதிக சுமை தரும் நாட்களாக தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில், வியாழக்கிழமைகளில் பெண்களைப் பொறுத்தவரை அன்பாகவும், காதல் வசப்படுபவர்களாகவும் உள்ளனர். 

இதன் காரணமாகத்தான், வெள்ளிக்கிழமைகளில், பெண்கள் மிகவும் அழகானவர்களாக தெரிவது மட்டுமின்றி, மகிழ்ச்சியாகவும் உள்ளனர். 60 சதவீத பெண்கள், வெள்ளிக்கிழமைகளில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். பெண்களில், 25 சதவீதத்தினருக்கும் மேல், பணிச்சுமை அல்லது பிற காரணங்களால், மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இதனால், புதன்கிழமைகளில் மதிய உணவு இடைவேளையின் போது கூட, ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டியுள்ளதாக, 19 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இது குறித்து இந்த ஆய்வை நடத்திய, "செயின்ட் த்ரோப்ஸ்´ நிறுவனத்தை சேர்ந்த நிபுணர் நிகோலா ஜாஸ் கூறியதாவது: பெண்களில், மூன்றில் ஒரு பகுதியினருக்கு, புதன்கிழமைகளில் மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, பிற்பகல், 3:30 மணி அளவில் அதிகப்படியான அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். 

இதனால்தான், பெண்கள், தங்களின் இயல்பான வயதைக் காட்டிலும், மிகவும் வயதானவர்களாக தெரிகின்றனர். அதுபோல், 46 சதவீதத்தினர், வார இறுதி நாட்களில் மதுபானங்களை குடிப்பதும் மற்றொரு காரணம். இதனால், திங்கள் கிழமைகளில், தூக்கமின்மையால், 37 சதவீதம் பேர் அவதிப்படுகிறார்கள். 

இதுவும், முதிர்ச்சியை காட்டிக்கொடுப்பதற்கான மற்றொரு முக்கிய காரணமாகும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் சகஜநிலைக்கு திரும்ப, இரண்டு நாட்கள் ஆகும்.இவ்வாறு நிகோலா ஜாஸ் கூறினார்.
thamilan thanks

No comments:

Post a Comment