குடித்து விட்டு நடுவானில் தகராறு செய்த பெண்கள்: விமானம் அவசரமாக தரையிறக்கம்
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 04:51.17 மு.ப GMT ]
குடித்து விட்டு தகராறு செய்த
பெண்களால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு சொந்தமான விமானமொன்று லண்டனிலிருந்து, துனிஷியாவுக்கு
புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, நடுத்த வயது பெண்கள் இருவர்
குடித்து விட்டு கழிப்பறைக்கு சென்று புகைத்து கொண்டிருந்தனர்.
இதன் பின் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றனர். இவர்களை தடுத்தி நிறுத்திய
விமான ஊழியர்கள், இருக்கையில் அமரும் படி அறிவுறுத்தினர்.
ஆனால் இவர்கள் இருவரும் இருக்கையில் அமராமல் தொடர்ந்து தகராறு செய்து
கொண்டிருந்ததால், விமான அவசரமாக பிரான்சின் லையோன் நகரில் தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து விமான நிலையத்தில் தயாராக நின்ற பொலிசார், இவர்களை கைது
செய்தனர்.
No comments:
Post a Comment