அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 27 January 2013

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு : கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்



ஜனவரி 28, 2013  at   12:24:22 PM
 
தமிழகத்திற்கு குறைந்தபட்சமாக 12 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
கர்நாடகா அரசு வழக்கம் போல், காவிரி அணைகளில் இருக்கும் தண்ணீர் கர்நாடக அரசின் பயன்பாட்டுக்கே போதுமானதாக இல்லை, குடிப்பதற்கு மட்டுமே காவிரி அணைகளில் தண்ணீர் இருக்கிறது என தெரிவித்தது.
தமிழக அரசுக்கு 6 டி.எம்.சி., தண்ணீராவது கொடுக்க முடியுமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட போது அதுவும் முடியாது என கர்நாடக அரசு தெரிவித்தது.

இதனையடுத்து நீதிபதிகள், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் காவிரி கண்காணிப்புக் குழு தனது பணியை சரிவர செய்யவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
சென்ற 20 வருடங்களில் கர்நாடக அரசு, காவிரி அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீர் தனது குடிநீர் தேவைக்காக எடுத்தது. தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டது ஆகிய விபரங்களை நாளைக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசு மனுவின் விபரம்: டெல்லியில் மத்திய நீர்வளத்துறைச் செயலர் துருவ் விஜய் சிங் தலைமையில் கடந்த மாதம் 10ம் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், ஜனவரி மாதத்திற்கு 12 டிஎம்சி நீர் வழங்குமாறு, தமிழக தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வலியுறுத்தியிருந்தார்.
ஏற்கனவே வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள 37 டிஎம்சி தண்ணீரையும் சேர்த்து, 55 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது.
மேலும் கர்நாடகாவில் தற்போது பயிர் சாகுபடி இல்லாததால் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கர்நாடக அரசு தங்களது அணைகளில் 17 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பதாக கூறி, கூடுதல் நீர் இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது என மறுத்துவிட்டது.
இதனையடுத்து தமிழகத்திற்கு கருகும் சம்பாவைக் காப்பாற்ற கர்நாடகம் 12 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக அரசு புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 17ம் தேதி அன்று தாக்கல் செய்தது.

puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment