அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 23 January 2013

முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா: மாவட்ட எஸ்.பி தகவல்!


புதன், 23 ஜனவரி 2013 13:02

முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா: மாவட்ட எஸ்.பி தகவல்!காரைக்கால்: "காரைக்காலில் நடைபெறும் குற்ற சம்பவங்களில், குற்றவாளிகளை உடனே அடையாளம் காணும் வகையில், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது" என மாவட்ட காவல்துறை  எஸ்.பி வெங்கடசாமி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்ற சம்பங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் வெளியூரைச்சேர்ந்த புதிய குற்றவாளிகளாக இருப்பதால், காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், காரைக்காலின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.

மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்த, மாவட்ட காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு கேமரா நிறுவனத்தினரை அழைத்து, அவர்களின் கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று காலை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கேமராக்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி வெங்கடசாமி கூறியதாவது:

"காரைக்கால் மாவட்ட ஆட்சியர்ர் அலுவலகம், திருநள்ளாறு நளன் குளம் மற்றும் ஜூவல்லரி, பெரும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூர், நண்டலாறு, பேருந்து நிலையம், பாரதியார் சாலையின் சிக்னல் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஆலோசித்து வருகிறோம். அதற்காக சில நிறுவனங்களின் கேமரா மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்தவுடன் கேமரா விரைவில் பொருத்தப்படும்.  இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடந்தால் காவல்துறையினர் உடனே அங்கு செல்லவும், குற்றவாளிகளை உடனே இனம் கண்டு கைது செய்யவும் ஏதுவாக இருக்கும்" என்றார்.

தகவல்: மு.இ. முஹம்மது இபுறாஹிம் மரைக்கார்

.inneram THANKS

No comments:

Post a Comment