
புதுடெல்லி:பெண்களுக்கு எதிராக நடக்கும்
வன்முறைகளில் தண்டனையை அதிகரிக்கவேண்டும் என்று நீதிபதி வர்மா கமிஷன்
பரிந்துரைத்துள்ளது. ”மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கருத்து
தெரிவித்தனர். அதனால், அதுபோன்ற குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும்,
கூட்டுப் பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கலாம்
என பரிந்துரை செய்துள்ளோம்” என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த
பேட்டியில் நீதிபதி வர்மா கூறினார்.
பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்
திருத்தம் செய்வது தொடர்பான சுமார் 630 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய உள்துறை
அமைச்சகத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான
குழு புதன்கிழமை சமர்ப்பித்தது.
அப்போது, குழுவின் உறுப்பினர்களான இமாசலப் பிரதேச
உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல்
கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
குழுவின் பரிந்துரைகளின் விவரம் குறித்து
தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை வர்மா கூறியதாவது: பாலியல் வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு
வழங்க எங்கள் குழுவுக்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 29
நாள்களில் அறிக்கை அளித்துள்ளோம். பல்வேறு தரப்பினரிடமிருந்து சுமார்
80,000 யோசனைகள் எங்களுக்கு வந்தன. இளைஞர்கள் பலர் முதிர்ச்சிமிக்க
யோசனைகளை
தெரிவித்தனர்.
தெரிவித்தனர்.
டெல்லியில், ஒடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைநகரில் போராட்டங்கள் வெடித்தன.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி, கண்ணீர் புகை
குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்துக்கு அரசு தரப்பில் இருந்து மன்னிப்பு கோரப்படும்
என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “சட்டம் ஒழுங்கை மாநகர போலீஸ் ஆணையர் சரியாக
பராமரித்து வருகிறார்’ என மத்திய உள்துறைச் செயலர் பாராட்டு தெரிவித்தார். அதைப்
பார்த்த எங்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது.
பரிந்துரைகள்: பொதுமக்கள்
பங்குபெறும் மின்ஆளுகையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். குற்ற
வழக்குகளைப் பதிவு செய்யும்போது, காவல் சரக எல்லை வரம்பை நீக்க
வேண்டும். பாதிக்கப்படுவோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட நடவடிக்கை
எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில்தான் அந்த நடைமுறைகள் நடைபெற வேண்டும் என்று
எதிர்பார்க்கக்கூடாது.
டெல்லியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும்
நடவடிக்கையில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது. அந்த நிலையைப் போக்க வேண்டும்.
பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து
வாகனங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், சிறுவர்
காப்பகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும்.
குற்றம் செய்வோர் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க
வேண்டும். ஆந்திரப் பிரதேசத்தில் குற்றச் செயல்களில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படும்
அந்த மாநில அமைச்சர் ஒருவரை நீக்கும்படி முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று
வர்மா கூறினார்.
அறிக்கையின் முக்கிய
அம்சங்கள்
இந்திய தண்டனைச் சட்டம் 100-வது பிரிவில், பாலியல் கொடுமைக்கு உடல் ரீதியாக ஆளாகும் போது தற்காப்புக்காக தடுக்கும் உரிமை வழங்குதல் என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் 100-வது பிரிவில், பாலியல் கொடுமைக்கு உடல் ரீதியாக ஆளாகும் போது தற்காப்புக்காக தடுக்கும் உரிமை வழங்குதல் என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையின்போது, சட்டத்தை
மீறுவோரையும், அதைத் தடுப்பதற்கு சட்டரீதியான கடமையை செய்யத் தவறும் அரசு
ஊழியர்களுக்கும் அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கலாம்.
இந்திய தண்டனைச் சட்டம் 376(அ) பிரிவின்படி, பெண்
மீது அமிலம் வீசப்பட்டால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு இழப்பீடு வகை செய்யலாம்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு
அதிகபட்சமாக ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கலாம். பாலியல் வன்கொடுமையில்
ஈடுபடும் பாதுகாப்புப் படையினரை வழக்கமான சட்ட விதிகளின்படியே தண்டிக்க வேண்டும்.
அதற்கு தகுந்தாற்போல ஆயுதப் படையினர் சிறப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யலாம்.
thoothuonline thanks
No comments:
Post a Comment