ஜனவரி 26, 2013

சமீபத்தில் மொத்த டீசல் கொள்முதலுக்கான விலையை ஒரு லிட்டருக்கு 11 ரூபாய் 81 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயத்தின. இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக டீசல் கொள்முதல் செய்து வந்த தமிழக அரசு போக்குவரத்து கழகம், தற்போது, கூடுதல் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில், தனியார் பங்குகளில் எண்ணெய் நிரப்பிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேட்டுப்பாளையத்தில் ஏராளமான அரசு பேருந்துகள் , தனியார் பங்குகளில் எரிபொருள் நிரப்பிச் சென்றன. இதனால் அரசுக்கு லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் 41 காசுகள் மிச்சப்படுவதாக கூறப்படுகிறது.
puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment