அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 27 January 2013

தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பி செல்லும் மாநகர பேருந்துகள்



சென்னை மாநகர அரசு பேருந்துகள் தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பி செல்கின்றதாகவும்,  மொத்த கொள்முதல் டீசல் விலையை விட, சில்லறை கொள்முதல் டீசல் விலை குறைவாகவே இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள சுதந்திரத்தின் படி, எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலை உயர்வை நிர்ணயித்து உள்ளன. அதன்படி டீசல் மொத்த கொள்முதல் விலை இரட்டை டீசல் விலை உயர்வாக இருக்கிறது என்றும், இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் நஷ்டம் ஏற்படும் என்று கூறி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, இரட்டை டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கவிலை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார் ஜெயலலிதா. இந்நிலையில் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்ய, சென்னை மாநகரப் பேருந்துகளில் தனியார் பெட்ரோல் பங்குகளில் சென்று டீசல் போட்டுக் கொள்ள போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

அதன் படி, இன்று காலை முதல் அனைத்து மாநகரப் பேருந்துகளும் தனியார் பங்குகளில் சென்று டீசல் நிரப்பி வருகின்றன. இதனால் மற்ற வாகனங்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சென்னையில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
\
4tamilmedia. thanks

No comments:

Post a Comment