ராமநாதபுரம், ஜன. 2-
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள ஓடைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 52). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று கருப்பாயி தனியாக இருந்தபோது அவரிடம் அதே பகுதியை சேர்ந்த காத்தமுத்து மகன் வடிவேல் (30) என்பவர் குடிக்க தண்ணீர் தாருங்கள் என்று கேட்டார். உடனே அவர் வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது திடீரென உள்ளே புகுந்த வடிவேல், கருப்பாயியை கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த கருப்பாயி, அவரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார், முடியவில்லை. இதையடுத்து அவர் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதில் ஆத்திரமடைந்த வடிவேல், அருகில் இருந்த கட்டையை எடுத்து, கருப்பாயியை பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினார். படுகாயங்களுடன் மயங்கி கிடந்த கருப்பாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணை கற்பழிக்க முயன்ற வடிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கற்பழிப்பு முயற்சியில் பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

maalaimalar. thanks
No comments:
Post a Comment