அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 14 February 2013

1 Billion Rising : பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய புரட்சி இன்று நடைபெறுகிறது!




1 Billion Rising : பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய புரட்சி இன்று நடைபெறுகிறது!
''உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார், அல்லது அடித்து துன்புறுத்தப்படுகிறார். உலகில் ஒரு பில்லியன் பெண்கள் கொடும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.''

இதை தடுக்க என்ன செய்ய முடியும்? : பதில் இவர்கள் சொல்கிறார்கள்

பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து உலகை ஒன்றுதிரட்டும் முயற்சி ஒன்றை V- Day குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். Valentines day என காதலர்கள கொண்டாடும் அதே பிப்.14ம் திகதியை இவர்கள் V-Day என அறிவித்திருக்கிறார்கள்.


இவர்களுடைய இலக்கு, பெண்களுக்கு நிகழ்த்தப்படு வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு பில்லியன் பெண்கள் எழுச்சி பெறவேண்டும்.  இவர்களுடைய அழைப்பு உலகின் காதுகளுக்கு நன்றாகவே கேட்டுவிட்டது. இப்போது உலகின் மிகப்பெரிய சமூக எழுச்சி போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது இந்த One Billion Rising திட்டம்.
சுமார் 203 நாடுகளில் ஆண்கள், பெண்கள் ஒன்றிணைந்து பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்தக்கோரி நூதன முறையில் இப்போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

தங்களது கோபம் மற்றும் எதிர்ப்பை, போராட்டம், கவனயீர்ப்பு, நடனம், எழுச்சி என்பவற்றின் ஊடாக வெளிப்படுத்துவதே இப்போராட்ட திட்டம்.

One Billion Rising இல் நீங்கள் இணைந்து கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியது என்ன?

ஒரு உலக கவனயீர்ப்பை நடத்துங்கள். நடனமொன்றுக்கு அழைப்பு விடுங்கள்,  பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றச்செயல் கலாச்சாரம் முற்றாக நிறுத்தப்படும் வரை தேச நிகழ்வுகளை புறக்கணியுங்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துங்கள், பெண்களின் பலத்தை, ஒற்றுமையை,  போராட்ட குணத்தை எண்ணிக்கை வடிவில் காட்டுங்கள் என்பதே இவர்கள் கோரிக்கை.  உங்களுக்கு ஆர்வம் இருக்கின்ற போதும், உங்களால் முன்னின்று நடத்த முடியவில்லையா?

அருகில் இந்நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று உங்கள் பங்களிப்பை கொடுங்கள். சென்னை, மும்பை, டெல்லி, தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், மேற்குலக நாடுகள் என உலகெங்கும் இவை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

நீங்கள் வசிக்கும் இடம் அருகில் நடைபெறுகிறதா என தெரிந்து கொள்ள வேண்டுமா? : இங்கு செல்லுங்கள்
மேலதிக தகவல்களுக்கு : http://www.onebillionrising.org/
- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா




/4tamilmedia thanks

No comments:

Post a Comment