அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 14 February 2013

டெல்லி பெண்கள் பாதுகாப்பு விவகாரம் : பிரதமர் தலையிட ஷீலா தீட்சித் வேண்டுகோள்!



டெல்லி போலீசார் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. டெல்லியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி படுத்த நீங்கள் தலையிட வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதை அடுத்து பெரிய அளவில் பல போராட்டங்கள் நடந்தன.

இந்த சம்பவத்துக்குப் பிறகும் டெல்லி போலீசார் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லை என்று, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

டெல்லியில் பலாத்கார சம்பவத்தால் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அதன் பிறகும், டெல்லி போலீசார் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

ஆனால் முன்பு போலவே நிலைமை உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கூட லஜ்பத் நகரில் நடந்த பலாத்கார முயற்சியில் கல்லூரி மாணவி கடுமையாக தாக்கப்பட்டார். அவரது வாயில் கம்பியால் குத்தப்பட்டு உள்ளது. டெல்லி போலீசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.

எனவே, இந்த  பிரச்சனையில், நீங்கள் தலையிடவேண்டும். நகரில் பெண்கள்  பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக டெல்லி முதல்வர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4tamilmedia. thanks

No comments:

Post a Comment