
February
17, 2013 08:50 am
தமிழகத்தின் கோவையில், 13
வயதுடைய மாணவி ஒருவரை உறவினரான மாமனே தொடர்ந்து கற்பழித்து
வந்ததோடு,தனது
நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.
கோவை
ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் (வயது 13) அதே
பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம்
வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த
ஆண்டு மாணவியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு சென்று குடியேறியதால், குறித்த மாணவி
ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து படித்து
வந்தார்.
சில
மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது மாமா
கோபாலகிருஷ்ணன் (55)
அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார். பாலு கோவை அரசு
மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
அப்போது, மாணவிக்கு மயக்க ஊசி போட்ட பாலு, கோபாலகிருஷ்ணன் துணையுடன் மாறிமாறி கற்பழித்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து இரண்டு பேரும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார்.
அதிர்ச்சி அடைந்த 2பேரும்
மாணவியிடம், நடந்த
சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக
மிரட்டியுள்ளனர்.
இதனால்
பயந்துபோன அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல்
இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட
கேபாலகிருஷ்ணன்,
குறித்த மாணவியை
தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மேலும், மாணவியை
பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார்
கோபாலகிருஷ்ணன். அங்கு அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம்
கருப்பசாமி (55)
ஆகியோர் மாணவியின் கற்பை சூறையாடியுள்ளனர்.
இவற்றை
வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தார் குறித்த மாணவி. இந்த நிலையில்
மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவருக்கு தெரிந்துள்ளது. இதை வைத்து மிரட்டிய
கார்த்திக் வீடு புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கு மேல் பொறுக்க முடியாது என எண்ணிய
மாணவி, கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து,
இதுகுறித்து கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார்.
பொலிஸ்
கமிஷனரின் உத்தரவு படி,ராமநாதபுரம் பொலிசார், அவரை
நாசம் செய்த அவரது மாமா கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி,ராகம்
கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.
5
பேரால் சீரழிக்கப்பட்ட மாணவி தற்போது, கோவை
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். தற்போது இந்த
பிரச்சினையை மாதர் சங்கம் கையில் எடுத்துள்ளதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கா விட்டால்
பெரும் போராட்டம் வெடிக்கும் என்று மாதர் சங்கம்
எச்சரித்துள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment