By dn, புது தில்லி
First Published : 15
February 2013
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன. இதேபோல டீசல் விலை லிட்டருக்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் விலைக் கட்டுப்பாட்டில் உள்ள டீசலின் விலை லிட்டருக்கு 45 காசுகள் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இந்த விலை உயர்வானது மதிப்பு கூட்டு வரி மற்றும் விற்பனை வரி தவிர்த்ததாகவும். இதனால் நுகர்வோர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கூடுதல் விலை அளிக்க வேண்டியிருக்கும்.
தலைநகர் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு வரி சேர்த்து ரூ. 1.80 உயர்த்தப்பட்டுள்ளது. தில்லியில் மதிப்பு கூட்டு வரி 19 சதவீதமாகும். டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்துள்ளன. உயர்த்தப்பட்ட நிலையில் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 69.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 48.16 ஆகவும் விற்பனை செய்யப்படும்.இதற்கு முன்பு பெட்ரோல் விலை கடந்த ஜனவரி மாதம் திருத்தியமைக்கப்பட்டது. அப்போது லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்பட்டன. இதனால் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 67.26-க்கு விற்கப்பட்டது.
பெட்ரோல் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.அதேபோல டீசல் விற்பனையால் ஏற்படும் நஷ்டத்தை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ள மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது
.dinamani. thanks

No comments:
Post a Comment